ஏழுமலையான் பக்தர்களுக்கு வந்த சோதனை.. திருப்பதி லட்டில் கலப்படம் செய்த கயவர்கள்.. தண்டனை கிடைக்குமா?

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகளை கலப்படம் செய்திருப்பது உறுதியாகி உள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Sep 20, 2024 - 11:41
 0
ஏழுமலையான் பக்தர்களுக்கு வந்த சோதனை.. திருப்பதி லட்டில் கலப்படம் செய்த கயவர்கள்.. தண்டனை கிடைக்குமா?
tirupati laddoos

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்று சொல்வார்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக மாட்டு கொழுபு பயன்படுத்தியது ஆய்வில் உறுதியாகி உள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ் பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 309ஆண்டுகள் முடிந்துள்ளது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் அந்த லட்டு ஏழுமலையானுக்கு எப்படி நைவேத்தியமாக படைக்கப்பட்டது என்ற வரலாற்றை பார்க்கலாம்.

ஆந்திர மாநிலம் திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாச பெருமாள் கலியுக கடவுளாக போற்றப்படுகிறார். தினசரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விஷேச நாட்களில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுவிற்கு தனித்துவம் உண்டு. திருப்பதி லட்டு போல் வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை தனித்துவமாக இருக்கும். அதற்காகவே இந்த லட்டுக்கு மவுசு அதிகம்.புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது.

லட்டு தயார் செய்யும் அறை பக்கம் சென்றாலே நெய் வாசம் கமகமக்கும். கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி,கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழுமலையானை தரிசனம் செய்தவர்கள் அடுத்து செல்வது லட்டு பிரசாதம் வாங்கத்தான்.லட்டு பிரசாதத்தை கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு கொஞ்சம் வாயில் போட்டு ருசி பார்த்தாலே நேரில் போய் ஏழுமலையானை தரிசித்தது போல உணர்வார்கள்.நெய் மணக்க மணக்க தயாரிக்கப்பட்ட லட்டில் இப்போது மாட்டுக்கொழுப்பு மீன் எண்ணெய் கலந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ( CALF ) ஆய்வகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.லட்டில் சேர்க்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக  முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கோயிலில் பிரசாதம் தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், தூய்மையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் சந்திரபாபு கூறினார். 

தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன பரிசோதனையில் முந்தைய ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு தடயங்கள் இருப்பதாக  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி கோயில் என்பது இந்து கோயில்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு அசைவம் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. பக்தர்களும் கடும் விரதம் இருந்து, கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருப்பதி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது லட்டு தான். இந்த சூழலில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக, முதலமைச்சரே குற்றச்சாட்டு வைத்த நிலையில், தற்போது ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையான் பிரசாதத்திலேயே கலப்படம் செய்ததவர்களுக்கு தகுந்த தண்டனை தரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow