விஜய் செய்வது கொஞ்சமாவது நியாயமா இருக்கா?... நம்பிக்கை இல்லாதவர்கள் கைகளில் கோயில்... தமிழிசை சரமாரி கேள்வி
Tamilisai Soundararajan on Animal Fat in Tirupati Laddu : திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tamilisai Soundararajan on Animal Fat in Tirupati Laddu : கோத்தகிரியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநரும் பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் , “திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் விலங்கின் கொழுப்பைக் கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்ம் “கோயில்களில் அரசாங்கம் பிரச்சனை ஏற்படுத்த கூடாது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் திமுகவின் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் நிர்வாகத்தில் உள்ளனர். கோயில் சொத்துக்களை எடுக்க பாரபட்சம் காண்பிக்கின்றனர். சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களில் வரும் வருமானம் அவர்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது. ஆனால் இந்து கோயில் வருமானத்தைக் கொண்டு இந்து கோயிலுக்கு கூட செலவு செய்வதில்லை. எனவே நம்பிக்கையானவர்களின் கைகளில்தான் இந்து கோயில்கள் வர வேண்டும். திருப்பதியில் கூட நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதை பற்றி கவலையின்றி இருந்துள்ளனர். அதில் முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் தான் அதை கண்டுபிடித்துள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்து பேசிய அவர், “உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்பது மட்டுமின்றி முதல்வர் வெளிநாட்டிற்கு சென்றபோது நிர்வாகத்தை உதயநிதி சிறப்பாக நடத்தினார் என்று சொல்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொண்டீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறது” எனக் கூறினார்.
மேலும் படிக்க: Squid Game 2 Teaser: ஆட்டம் இனிதான் ஆரம்பம்... மிரட்டலாக வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்!
மேலும், “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாநாடு(TVK Maanadu) நடத்துவதற்கு ஒருவழியாக அக்டோபர் 27 ஆம் தேதி என அறிவித்துள்ளார். அதில் எந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறார் என்று சொல்லட்டும். தற்போது வரை ஒரு சாயத்தை பூசிக் கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். திமுக பாதையில் செல்கிறார். நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார், இரு மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தன்னுடைய படங்கள் மட்டும் எல்லா மொழியிலும் வெளிவர வேண்டும். ஆனால் குழந்தைகள் மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள கூடாது என்பது எவ்விதமான நியாயம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?