2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்க முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். ஏற்கனவே கூட்டணி வலுவாக உள்ளது. இருந்தாலும், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை மேலும் ஸ்டாலின் வலு சேர்த்து வருகிறார்.
புதிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க வேண்டி இருப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி குறைக்கவும். போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே சீட் கிடைக்குமா என்ற கலக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நிர்வாகிகள் பதற்றத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, தமீமூன் அன்சாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு சீட் ஒதுக்கப்படுமா என்ற ஐயம் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது அமைச்சராக இருக்கும் நாசருக்கு மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால், செஞ்சி மஸ்தான், அப்துல் வஹாப் ஆகியோர் சீட் தரலாமா வேண்டாமா என திமுக தலைமை யோசித்து வருவதாக தெரிகிறது. ஏனென்றால் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி நினைக்கிறார்.
அந்த வகையில், ராயபுரம் தொகுதிக்கு சுபேர் கான், ஆர்.கே.நகர் தொகுதியில் செய்தி தொடர்பு துணைச் செயலாளர் டாக்டர் செய்யது ஹஃபீஸ், புதுக்கோட்டை தொகுதியில் முன்னாள் எம்பி அப்துல்லாஹ், செங்கல்பட்டு தொகுதியில் இளைஞரணி மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதே நேரம் புதிய கட்சி வரவு, குறைவான தொகுதியில் போட்டி என்பதால் பிரதிநிதித்துவம் குறைக்கபடுமா என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் நிர்வாகிகள் உள்ளனர்.

LIVE 24 X 7