குரு பெயர்ச்சி பலன் 2024: தீபாவளிக்கு முன் குரு கொட்டிக்கொடுக்கப்போகும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?

குரு பகவான் அக்டோபர் முதல் வக்ர நிலையில் பயணம் செய்யப்போவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Sep 20, 2024 - 16:56
 0
குரு பெயர்ச்சி பலன் 2024:  தீபாவளிக்கு முன் குரு கொட்டிக்கொடுக்கப்போகும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
guru peyarchi palan 2024

ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் அடுத்த மாதம் முதல் வக்ரமடைகிறார்.அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் வரை வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் தீபாவாளிக்கு முன்பாகவே சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தேடி தரப்போகிறார்.யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம். 

மேஷம்:  

குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார் குடும்ப ஸ்தான குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தற்போது பார்க்கும் வேலையை விட நல்ல வேலைகள் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் காலம் வந்து விட்டது

ரிஷபம்:  

உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்கிறார் குரு பகவான். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவருமானம் அதிகரிக்கும்.  பேச்சில் தெளிவும், மனதில் அமைதியும் பிறக்கும். பார்க்கும் வேலையில் உயர் பொறுப்புகள் உங்களுக்கு தேடி வரப்போகிறது. கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய நேரம் கைகூடி வந்துள்ளது அனுபவிக்கத் தயாராகுங்கள்.  

மிதுனம்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் வீடு, 6 ஆம் வீடு மற்றும் 8 ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். உங்களுக்கு பண வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது.  அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தீபாவளி நாளில் இருந்து எதிர்பாராத வகையில் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும். 

கடகம் :

லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கு 3ம் வீட்டினை குரு 5ம் பார்வையாக பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார்.  குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். 

சிம்மம்:

பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்வதால்  சிம்ம ராசிக்காரர்களுக்கு  நன்மையே நடக்கும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள்.வருமானம் அதிகரிக்கும் வீடு,மனை வாங்கலாம்.  

கன்னி:

ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ஆமிடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். 

துலாம்:

அஷ்டம ஸ்தானத்தில்  பயணம் செய்யும் குரு பகவானின் பார்வையினால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடைபெறும். உங்கள்  ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பணவருமானம் அதிகரிக்கும். உணவு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது.  

விருச்சிகம்:  

குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை, உங்கள் ராசியின் மீதும், லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும். கோடி கோடியாக செல்வம் சேர்க்கப்போகிறீர்கள். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். 

தனுசு:

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்  10ஆமிடமான தொழில் ஸ்தானம் 12 ஆம் இடமான விரைய ஸ்தானம் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் கூட சுப விரைய செலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும்.எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும்.

மகரம்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை குரு பகவான் பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் குரு பார்வையிடுவது சிறப்பு. குரு பார்வையால் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கோடி கோடியாக செல்வம் சேரும் யோக காலம் உங்களுக்கு வந்து விட்டது. 

கும்பம்:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடங்களின் மீது விழுகிறது. பண வருமானம் வரும். யாரிடமும் கடன் வாங்கவோ,யாருக்கும் கடன் கொடுக்கவோ வேண்டாம்.

மீனம்:  

குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது வீட்டினை குரு பகவான் பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தீபாவளி நாளில் திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow