Actress Malavika Mohanan : விக்ரம் திரைக்கு முன்னால்.. திரைக்குப் பின்னால்.. உருகிய மாளவிகா மோகனன்
Actress Malavika Mohanan on Vikram : திரைக்கு முன்னால் விக்ரம் நல்லா சண்டை போடுவார். ஆனால் திரைக்குப் பின்னால் நல்ல நண்பர் என்றும் மதுரையில் தான் இந்தியாவிலயே சிறந்த உணவுகள் உள்ளது என்றும் நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
Actress Malavika Mohanan on Vikram : இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக(Thangalaan Movie Release Date) உள்ளது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
தங்கலான் திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். கோலார் தங்கச் சுரங்கத்தில் எப்படி தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது, சுரங்கத்தொழிலுக்காக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்த படமாக இது உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
படம் விரைவில் வெளியாக உள்ளதால், படத்திற்கான ப்ரோமோஷன் பணியினை படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘தங்கலான்’ திரைப்படத்தின் புரோமோஷன் விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன்(Malavika Mohanan), பார்வதி உட்பட திரைப்படக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாளவிகா மோகனன்(Malavika Mohanan), “மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும், கறித்தோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவு பிடிக்கும் இந்தியாவிலயே மதுரையில் தான் உணவு சிறப்பாக உள்ளது. தங்கலான் பட சூட்டிங் தொடக்கம் மற்றும் முடிவு இரண்டுமே இங்கு தான் நடந்தது. எனது சிறப்பான இடமாக மதுரை அமைந்துள்ளது. விரைவில் நான் தமிழில் சரளமாக பேசுவேன்.
பல்வேறு இடங்களில் சூட்டிங் நடைபெற்றாலும், மதுரை எப்போதும் ஸ்பெஷல் தான். விக்ரம் சிறந்த நடிகர் என்று நான் பலமுறை சொல்வேன். தங்கலானில் திரைக்கு முன்னால், சிறப்பாக சண்டை போடுவார், ஆனால் திரைக்குப் பின்னால் நல்ல நண்பர்.
இந்த படத்தில் நடித்த ஆங்கில நடிகர் டேனி புதிய இடம், புதிய கலாச்சாரத்தோடு சேர்ந்துவிட்டார். அவர் அதிகளவு இந்திய படங்களில் நடிக்க வேண்டும். நான் மதுரைக்கு வர வேண்டும் கறிதோசை சாப்பிட வேண்டும். இந்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு மிக்க நன்றி” என்றார்.
What's Your Reaction?