Ajith Kumar : அதுக்குள்ள விடாமுயற்சி ஷூட்டிங் ஓவரா..? அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்!

Actor Ajith Kumar Return Chennai : விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித், திடீரென சென்னை திரும்பியுள்ளார்.

Jul 2, 2024 - 18:01
Jul 2, 2024 - 18:35
 0
Ajith Kumar : அதுக்குள்ள விடாமுயற்சி ஷூட்டிங் ஓவரா..? அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்!
Actor Ajith Kumar Return Chennai Will Join Vidaamuyarchi Shooting

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பின்னர் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருவது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதலில் தொடங்கப்பட்ட விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைனானில் தொடங்கியது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.  

ஆனால், திடீரென விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்பட, அஜித் உடனே ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு குட் பேட் அக்லி எனவும் டைட்டில் கன்ஃபார்ம் ஆனது. அதோடு ஐதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் அஜித்தின் போர்ஷன்களை மட்டும் ஷூட் செய்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த நிலையில் தான் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்தார் அஜித். அதோடு அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. மேலும், விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகும் எனவும் தகவல்கள் வெளியாகின.  

இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு சீக்கிரம் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அஜித்தோ அஜர்பைஜானில் இருந்து திடீரென சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அஜித் வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆகஸ்ட் முதல் வாரம் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறும் எனவும், அதுவரை அஜித் அஜர்பைஜானில் தான் இருப்பார் என்றும் சொல்லப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இதுதான் விடாமுயற்சி இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.  

இந்நிலையில், அஜித் திடீரென சென்னை திரும்பியுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்படுகிறதா இல்லை வேறு ஏதும் சிக்கல்களா என விவாதித்து வருகின்றனர். ஆனால், அஜித் சின்ன பிரேக் எடுத்துவிட்டு உடனடியாக அஜர்பைஜான் செல்லவிருப்பதாகவும், விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரையிலும் அஜித் இல்லாத காட்சிகளை ஷூட் செய்ய இயக்குநர் மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow