மகளுக்கு தந்தை செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.. சிறையில் தள்ளிய போலீஸ்
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன. கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உத்தரபிரதேசத்தில் செவிலியர் பாலியல் கொலை, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார் கொடூரத் தந்தை ஒருவர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த அனீஸ் அகமது (வயது42) தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் (வயது13) அதே பகுதியில் உள்ள இஸ்லாமிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகளுக்கு உடல்நல குறைவு காரணமாக மனைவி நசீமா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுகுறித்து குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகார் பெற்றதை அடுத்து அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் தந்தை தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து நான்கு மாதம் கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமியின் தந்தை அனீஸ் அகமது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் தந்தையே சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து 4 மாதம் கர்ப்பமாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி
இதுபோன்ற சம்பவங்களால் வீட்டிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது வருத்ததிற்குறிய விஷயமாகவே இருக்கிறது.
What's Your Reaction?






