’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

Oct 2, 2024 - 00:49
 0
’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர்  வரையிலான காலகட்டத்தை தென்மேற்கு பருவமழை காலமாக கணக்கிடுவது வழக்கம். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சராசரி இயல்பாக 328.4 மி.மீ என்ற அளவில் பெய்ய வேண்டும் ஆனால் இந்த ஆண்டு 389.1 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 18% கூடுதலாகும்.

இன்றுடன் செப்டம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கான மழை கணக்கிடும் பணி நிறைவடைந்தது. நாளை முதல் வடகிழக்கு பருவமழை கணக்கீடு தொடங்குகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கான முன்னறிவிப்பு குறித்து நீண்டகால வானிலை முன்னறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை குறித்து அவர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பை விட 18 சதவீதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. மாவட்ட அளவில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை நெல்லையில் இயல்பை விட மிக அதிகமாக பெய்துள்ளது. 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும் மழை பெய்துள்ளது”, என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை என்பது இயல்பை விட குறைவாகவும் பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை என்பது இயல்பை விட 74 சதவீதம் வரை அதிகம் பெய்தது. ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட 43 சதவீதம் அதிகம் பெய்துள்ளது”, என்றார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன் இல்லை... வெளியான அதிர்ச்சி தகவல்!

தொடர்ந்து இனி மழையில் அளவு எப்படி இருக்கும் எனபது குறித்து பேசிய அவர், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்தார். மேலும், “வடகிழக்கு பருவமழை தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா, ஆந்திராவை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் இயல்பைஇயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது”, என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow