வேளாங்கண்ணி மாதா.. புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த்திருவிழா.. குட் நியூஸ் சொன்ன இந்திய ரயில்வே

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Aug 9, 2024 - 05:00
Aug 9, 2024 - 16:33
 0
வேளாங்கண்ணி மாதா.. புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த்திருவிழா.. குட் நியூஸ் சொன்ன இந்திய ரயில்வே
Velankanni festival to begin from 29th august special train announcement western railway

நாகை: வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.  8ஆம் தேதியன்று ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. வேளாங்கண்ணி மாதா திருவிழாவையொட்டி வரும் 8ஆம் தேதியன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றாக இருப்பது வேளாங்கண்ணி. அங்கு புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பெருவிழா நடத்தபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பெருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

புனித ஆரோக்கிய அன்னை திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள். விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். 

திருவிழாவுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றனர். அதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், பயணிகள் அதிகமாக வரும் வசதிக்காகவும் தாம்பரம்-வேளாங்கண்ணி இடையிலான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில் சேவையானது அறிவிக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.

பாந்திரா ரயில் நிலையத்தில் ( ரயில் எண் 09093 ) 27ஆம் தேதி இரவு 9 மணி 55 நிமிடங்களுக்கு புறப்படும் ரயிலானது பூனே, ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை வந்தடைகிறது. 
இதே போல வேளாங்கண்ணியில் (ரயில் எண் 09094)  இருந்து ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியும் செப்டம்பர் மாதம் 9 தேதியும் ரயில் இயக்கப்படுகிறது.  ஆகஸ்ட் 29ஆம் தேதி மதியம் 1 .55மணி அளவில் வேளாங்கண்ணியில் இருந்து ரயில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி ஒரு பெட்டியும், மூன்றாம் வகுப்பு ஏசி 10 பெட்டிகளும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஏழும்,  முன்பதிவு செய்யப்படாத பெட்டி இரண்டும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் போரிவலி, வசாய் சாலை, பன்வெல், லோனாவ்லா, புனே, டவுண்ட், சோலாப்பூர், கலபுர்கி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கான்ட்., திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் துறைமுகம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இரு திசைகளிலும் சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் நிலையம்.  இந்த ரயிலில் ஏசி 2-டையர், ஏசி 3-டையர், ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் உள்ளன.

ரயில் எண். 09093க்கான முன்பதிவு ஆகஸ்ட் 09, 2024 முதல் அனைத்து PRS கவுன்டர்களிலும் IRCTC இணையதளத்திலும் திறக்கப்படும். மேற்கண்ட ரயில் சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயிலாக இயக்கப்படும். நிறுத்தங்களின் நேரம் மற்றும் கலவை பற்றிய விரிவான தகவலுக்கு, பயணிகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow