மெய்யழகன் படம் பார்க்கலாமா? சட்டம் என் கையில், பேட்டராப், தேவரா ரிசல்ட் எப்படி?
கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன், சதீஷ் கதைநாயகனாக நடித்த சட்டம் என் கையில், விஜய்ஆண்டனியின் ஹிட்லர், பிரபுதேவா நடித்த பேட்டராப், விஜய்சத்யா நடித்த தில்ராஜா, ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா ஆகிய 6 படங்கள் இந்த வாரம் ரிலீஸ். இந்த படங்களின் விமர்சனம் எப்படி? மக்கள் ரசிக்கிறார்களா?
மெய்யழகன்/ ரேட்டிங் 3.5/5
குடும்ப பிரச்னைகள் காரணமாக, சொந்த வீடு பறி போன நிலையில் தஞ்சையை விட்டு சென்னைக்கு கிளம்பும் அரவி்ந்த்சாமி, ஒரு திருமணத்துக்காக 22 ஆண்டுகளுக்குபின் தஞ்சை வருகிறார். நீடாமங்கலத்தில் நடக்கும் அந்த திருமணவீட்டில் அத்தான்...அத்தான் என அரவிந்த்சாமியை சுற்றி வருகிறார் கார்த்தி. யாருடா இவன் என்று சலிப்படைந்தாலும் சூழ்நிலை காரணமாக அவர் வீட்டில் இரவு தங்க வேண்டிய சூழ்நிலை. பீர் குடித்துவிட்டு இரண்டுபேரும் நிறைய பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் தனக்கு பிறக்கப்போகிற குழந்தைக்கு உங்க பெயர்தான் வைக்கப்போறேன்னு கார்த்தி சொல்ல, அட, இவன் பெயர் என்ன. இவன் யார்னு தெரியலையே அரவிந்த்சாமி தவிக்க, என்ன நடக்கிறது என்பதை அழகான கவிதை மாதிரி மெ ய்யழகனை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ச.பிரேம்குமார். விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் இயக்குனர்
ஒரு பயணம், ஒரு இரவு, நிறைய உரையாடல்கள் இதுதான் முக்கியமான சீன்கள் என்றாலும், அதன் வழியே சொந்த வீடு, கிராமத்து மனிதர்களின் பாசம், உறவுகளின் வலிமை, பால்ய நினைவுகள், சுயநலம் இல்லாத மனிதர்கள் என பல விஷயங்களை அழகாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். சென்னையில் இருந்து தஞ்சைக்கு அரவிந்த்சாமி வருவதில் இருந்து கதை தொடங்கிறது. அந்த கேரக்டராகவே அவர் வாழ்ந்து இருக்கிறார் என சொல்லலாம். படம் செல்ல, செல்ல அவர் நடிப்பும் முதிர்ச்சி அடைகிறது. கடைசி அரைமணி நேரம் அவர்தான் படத்தின் ஹீரோ. அத்தான்...அத்தான் என்று எத்தனைமுறை கார்த்தி டயலாக் பேசியிருக்கிறார் என்று போட்டியே வை க்கலாம். அந்த அளவுக்கு ஒரு வெ ள்ளந்தி மனிதராக நடிப்பில் பின்னி இருக்கிறார். குறிப்பாக, தனது அப்பா பற்றி, சைக்கிள் பற்றி, அரவிந்த்சாமியுடனான தனது சின்ன வயது நினைவுகள் சொல்வது கலங்க வைக்கிறது.
இவர்களுக்கு இடையே உறவுகாரர்களாக ராஜ்கிரண், மணப்பெண் தங்கையாக சுவாதி, கார்த்தி மனைவியாக வரும் ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி மனைவி தேவதர்ஷினி, பூக்கார பெண்ணாக வரும் ரேச்சல், அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ், கண்டக்டராக வரும் கருணாகரன் என பலரும் மனதில் நிற்கிறார்கள். தஞ்சை, நீடாமங்கம், சென்னையில் அந்த கிளி சீன்களை அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ். கோவிந்த் வசந்தா இசையில் கமல்ஹாசன் வரிகளி்ல யாரோ இவன் பாடல் மனதை அள்ளுகிறது.
சொந்த ஊர், சொந்த வீடு, சொந்தங்கள், நினைவுகள், பாசம் இதுதான் படத்தின் அடித்தளம். படம் பார்க்கிற பலருக்கும் சொந்தஊர், சொந்தவீடு, சொந்தங்கள் நினைவுக்கு வருவார்கள். கார்த்தி மாதிரி நம் குடும்பத்தில் இவர் இருக்கிறாரே என்ற பீலிங் வரும். உரையாடல்கள் வழியே படம் நகர்கிறது. முதற்பாதியில் காமெடி, கலாட்டா என நகர்கிறது. இரண்டாம்பாதியில் அந்த உரையாடல்கள் பல இடங்களில் போரடிக்கிறது. குறிப்பாக, ஆற்றங்கரையில், கொல்லையில் பேசும் ஈழம், சேர சோழ வீரம், போர், துாத்துக்குடி பிரச்னை, ஜல்லிக்கட்டு காட்சிகள், ஒன்றுக்கு போகும் காட்சிகள் இந்த படத்தின் கதைக்கும் தேவை இல்லாததாக தெரிகிறது. தயங்காமல் அதை வெட்டி ஏறிந்துவிட்டால் படம் இன்னமும் விறுவிறுப்பாகி இருக்கும். அதேபோல் கை விட்டு போன வீடு குறித்த எந்த பதிவும், அழுத்தமான சீனும் இல்லாதது ஏமாற்றம். ஏமாற்றிய உறவினர்கள், அவர்கள் பின்னணி குறித்த கேள்விகளுக்கு விடை இல்லை.
அதேசமயம், கார்த்தி பெயரை தெரிந்து கொ ள்ள நினைக்கும் அரவிந்த்சாமியின் தவிப்புக்கு பல விருதுகள் கொடுக்கலாம். பயணம், கல்யாண மண்டபம், கார்த்தியின் வீட்டு பேச்சு, கோயில், பூக்கடை, அர்ச்னை, மீண்டும் ஊர் திரும்புதில் போன்ற காட்சிகள் விறுவிறுப்பு. கண்டிப்பாக, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம் மட்டுமல்ல, பல விஷயங்களை நாம் உணர வேண்டிய, குழந்தைகளுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டிய படம் மெய்யழகன்.
சட்டம் என் கையில்/ ரேட்டிங் 3/5
**
ஏற்காட்டில் குடித்து விட்டு கார் ஓட்டி வருகிறார் சதீஷ். அவர் காரில் விழுந்து ஒருவர் இறக்க, அந்த பாடியை டிக்கியில் வைத்து பயணத்தை தொடர்கிறார். அப்போது டிரங்க் அண்ட் டிரைவ் வழக்கில் அவரை போலீஸ் பிடிக்கிறது. அன்று இரவு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். அப்போது அந்த ஏரியாவில் ஒரு பெண் கொலை செய்யப்பட, அது பற்றி அந்த ஸ்டேஷனில் துப்பறிகிறார்கள். இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாச்சி. விபத்து, விசாரணை, சில விபரீதம் என வேகமாக திரைக்கதை நகர்வது படத்துக்கு பலம். குறிப்பாக, சதீஷ், போலீஸ்காரர்கள் அஜய், பாவல் சம்பந்தப்பட்ட சீன்கள் ரசிக்க வைக்கிறது. கொலை செய்யப்படும் பெண் யார்? அவரை கொன்றது யார் என்பது போன்ற விசாரணை விறுவிறுப்பு. ஒரே இரவில் கதை நடப்பதும், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் கோர்வையாக இருக்கிறது. முதற்பாதியில் அமைதியாக இருக்கும் சதீஷ், கடைசி சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், புது கே ரக்டர்கள் படத்துக்கு பலம். போலீஸ்காரர்களுக்கு இடையேயான போட்டி, ஈகோ, பொறாமை, விசாரணையில் நடக்கும் விஷயங்கள், அந்த பெண் சம்பந்தப்பட்ட சீன்கள் ஓகே. முதற்பாதியில் இன்னும் வேகம் காண்பித்து இருக்கலாம். ஆனாலும், கிளைமாக்ஸ் நச். கதைதான் முக்கியம் என்பதை உணர்ந்து கதைநாயகனாக நடித்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் சதீஷ்.
ஹிட்லர்/ ரேட்டிங் 2.5/5
தேர்தலில் ஜெயித்து, கட்சியில் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் மீண்டும் அமர ஆசைப்படுகிறார் மந்திரி சரண்ராஜ். ஓட்டுக்காக அவர் அனுப்பும் சில நுாறு கோடிகளை ஒரு கும்பல் கடத்துகிறது. சிலரை கொல்கிறது. அதை செய்யது யார் என்பதை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி கவுதம்மேனன். இந்த சம்பவத்துக்கும் ஹீரோ விஜய்ஆண்டனிக்கும் என்ன தொடர்பு. அவர் ஏன் கொள்ளை அடிக்கிறார். அந்த பணத்தை என்ன செய்கிறார் என்பது ஹிட்லர் படத்தின் கதை. முதற்பாதி முழுக்க, விஜய் ஆண்டனி, ரியா காதல், பணம் கொள்ளை, கவுதம்மேனன் விசாரணை என நகர்கிறது. 2ம் பாதியில் அதற்கான விடை கிடைக்கிறது. கிளைமாக்சில் பணத்தை என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் கவுதம்மேனன். அதுக்கு இவ்வளவு பணம் தேவையில்லையே என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுகிறது. அதுமட்டுமா? இந்த படத்தில் விஜய் ஆண்டனி என்ன செய்கிறார். எப்படி நடிக்க சம்மதித்தார். ஏன் இவ்வளவு சொதப்பல் என்பது உட்பட பல கேள்விகளும் எழுகிறது. தனா இயக்கிய இந்த படம் வழக்கமான இன்னொரு விஜய்ஆண்டனியின் வெகு சுமாரான படம்
பிரபுதேவா, வேதிகா, சன்னிலியோன் நடித்த பேட்டராப் கதை, டான்ஸ் பின்னணியில் நடக்கிறது. பெரிதாக படத்துக்கு வரவேற்பு இல்லை. ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய்சத்யா நடித்த தில்ராஜா பலம் வாய்ந்த ஒரு தரப்பால், மிடில் கிளாசை சேர்ந்த ஹீரோ பாதிக்கப்பட, அடுத்து என்ன நடக்கிறது என்ற பாணியில் நகர்கிறது. தெலுங்கு டப்பிங் படமான தேவரா அப்பா, மகன் கதை. அப்பா, மகனாக ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். அவர் ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவி மகள் அறிமுகம் ஆகியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.கடல், ஆக் ஷன் பேக்கிரவுண்டில் உருவான அந்த படத்துக்கும் தமிழகத்தில் ஈர்ப்பு இல்லை.
What's Your Reaction?