#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்