பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை... பெண் உட்பட 5 பேர் கைது
சென்னையில் பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்த பெண் தலைமையிலான கும்பலை கைது செய்தனர்.
சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு என ஒரு பிரிவை சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவைச் சேர்ந்த போலீசார் நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.
வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், ஹோட்டலில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், தனியார் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்து வரும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது.
அவர்களிடம் மெத்தப்பட்டமைன் எப்படி கிடைத்தது குறித்து விசாரணை நடத்திய போது, மணலி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சகிமா மௌசியா பெண்ணிடம் வாங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது.
அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்ட ((பெண்)) சகிமா மௌஸியா மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள், சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும், மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
மௌசியாவின் பின்னணியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல் யார்? இன்னும் போதைப் பொருள் விற்பனையில் எத்தனை இளைஞர்கள் தொடர்பில் உள்ளனர் என்ற பட்டியலை விசாரித்து வரும் போலீசார் தப்பிச்சென்ற இரண்டு பேர் உட்பட ஒட்டுமொத்த போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கையும் பிடிப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?