‘பழையன கழிதல்’ அரசியலுக்கு பொருந்தாது.. கூட்டணியில் தொடர்கிறோம் - ராமதாஸ் ட்விஸ்ட்
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நன்னூலாரின் சூத்திரம் அரசியலுக்கு பொருந்தாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், “தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது வரவேற்க தக்கது என்றும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து முக ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும். தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துவங்கியுள்ளது. மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தவறான தகவலை பரப்பிய திமுகவின் சமூக நீதி முகமுடி உடைந்துள்ளது.
தெலுங்கானாவில் நேற்று துவங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு 30 ஆம் தேதி முடிந்து டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. கணக்கெடுப்பு பணியில் 80 ஆயிரம் பணியாளரும் 18 ஆயிரம் மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். தமிழக அரசு நினைத்தால் 2 லட்சம் பணியாளர்களை கொண்டு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விடலாம்.
தெலுங்கானாவில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவில் முன்மாதிரியாக இருக்குமென அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறும் மு.க.ஸ்டாலின் இனியாவது கைவிட வேண்டும்.
கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறது. கர்நாடகத்திலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யபடுவதால் மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது” என்றார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூல் தன்னுடைய சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது குறித்த கேள்விக்கு பதலளித்த ராமதாஸ், பாஜகவிலிருந்து விலகவில்லை என்றும் இது அரசியலுக்கு சம்பந்தமில்லை என விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒன்னரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறுவிப்போம் என்றும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் காவல்துறையினர் செயல்பாடுகள் குறித்து ஈரல் அழுகி விட்டதாக கூறினார். காவல் துறையினர் கடலூரில் நடந்து கொண்டது, ஈரல் மட்டுமல்ல மூளை, இதயம் எல்லாமே கெட்டுபோய் உள்ளதாக கூறினார். தமிழகத்தில் புதியதாக தொடங்கும் கட்சிகள் திராவிடத்தினையும் தமிழ் தேசியத்தினை முன்னெடுப்பது குறித்து பதில் அளிக்க தயாராக இல்லை என்றார்.
What's Your Reaction?