10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jan 4, 2025 - 13:01
 0
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர், செய்து கொடுத்த பணிகளுக்கான பில்களை வழங்கக் கோரியிருக்கிறார். பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தயாளன் கேட்டிருக்கிறார்.

இதுசம்பந்தமாக பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், தயாளனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தயாளனுக்கு எதிராக இந்த லஞ்ச வழக்கை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா, குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தயாளனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும்,  ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow