Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி?.. உளவுத்துறை எச்சரிக்கை.. ரவுடி முருகேசன் அதிரடி கைது..
Rowdy Murugesan Arrest in Armstrong Murder Case : பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
Rowdy Murugesan Arrest in Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார், இதுவரை 23 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 23 நபர்களில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனும் ஒருவர். இந்த கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொலை கும்பலுக்கு நிதி உதவி, சட்ட உதவி் என பக்கபலமாக இருந்தது பிரபல ரவுடிகள் சம்போ செந்தில்(Sambo Senthil), பாம் சரவணன், சீசிங் ராஜா மற்றும் சிறையில் இருக்கும் மற்றொரு ரவுடி என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் சிறையில் இருக்கும் செந்திலின் கூட்டாளி ஈசாவை, கட்டிட ஒப்பந்தக்காரர் கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு(Armstrong Murder Case) தொடர்பாகவும் விசாரித்துள்ளனர்.
மேலும் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனின் தந்தையும், கொலை வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியுமான நாகேந்திரனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் பெயரும்(Rowdy Nagendran) குற்றத்தில் 24வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி கொலை நடக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை அளித்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கு நெருக்கமானவரும், பாம் சரவணன் கூட்டாளியும், கூலிப்படை தலைவருமான முருகேசனை(Rowdy Murugesan) தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மடிப்பாக்கம் செல்வம், செங்குன்றம் பார்த்திபன் உள்ளிட்டவர்களின் கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி முருகேசன்(Rowdy Murugesan) தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடிவரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி கொலையைத் தடுக்க ஆம்ஸ்டாங்குக்கு நெருக்கமான தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் காவல்துறை தேடி கைது செய்து வருகின்றனர்.
What's Your Reaction?