இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்; நடுரோட்டில் வித்தை காட்டும் இளைஞரால் பொதுமக்கள் அவதி
கரூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் பொதுவெளியில் சாகசம் செய்யும் கல்லூரி மாணவரின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் மோகம் பாடாய் படுத்தி வருகிறது. டிக் டாக் ஒழிந்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டு முடிவதற்குள் ரீல்ஸ் என்ற புதிய அம்சத்துடன் களமிறங்கியது இன்ஸ்டாகிராம். காலை எழுந்து பல் துலக்குவது முதல் குளித்து பணிக்கு கிளம்பும் வரை ரீல்ஸ் செய்து அப்லோட் செய்வதை ஒரு முழு நேரக் கடமையாகவே செய்து வருகின்றனர். தினம் தினம் புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர் தற்போதைய 2k கிட்ஸ். இதுமட்டுமில்லாமல் க்ரிஞ்சு டயலாக்குகளுக்கு வாயசைப்பது, பாடல்களுக்கு ஆடுவது, பொது இடங்களில் வித்தை காட்டுவது என்று ஒரு எல்லையே இல்லாமல் உலகம் எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. பொழுதுபோக்கிற்காக மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கம் ஒதுங்கிய பலரும் தற்போது தங்களது வாழ்க்கையையே இழந்து வருகின்றனர். வெறும் லைக், ஷேர், ஃபாலோயர்களுக்காக பல அட்டூழியங்களை செய்து வருகின்றனர்.
கரூர் பகுதியை சேர்ந்தவர் சபரி. கல்லூரி மாணவரான இவர் உடலை வளைத்து குட்டிக்கரணம் போடுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். கல்லூரி கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் சாகசம் செய்து சக மாணவர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சமீப காலமாக இவர் கரூர் பேருந்து நிலையம், கோயில் திருவிழாக்கள், பேருந்து நிறுத்தம், தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு பொது வெளியில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக காவல்துறையிடம் எந்த வித முன் அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படும் நிலையில், பொது இடங்களில் இவரது சேட்டைகளை கண்டு பொதுமக்கள் முகம் சுழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஊட்டி மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
இளம் பெண்களின் பார்வை தன் மீது பட வேண்டும், இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் மற்றும் வியூஸ் வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொது இடத்தில் சாகசம் செய்து, பொதுமக்களுக்கு இடையூறும், அச்சுறுத்தலும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், மேடையில் செய்ய வேண்டிய சாகசங்களை வீதிக்கு கொண்டு வந்துள்ள சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவரை காவல்துறையினர் அழைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அண்மையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?