ஆடி மாதத்தில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம்.. பார்த்தாலே அதிர்ஷ்டம்.. என்னென்ன நன்மைகள்

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் அன்பு என்பவர் கொத்து கொத்தாக பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. பிரம்ம கமல மலர் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது. தமிழ் மாதங்களில் ஆடி, ஆவணியில் இந்த பூக்கள் பூக்கும்.

Aug 7, 2024 - 10:18
 0
பிரம்ம கமல மலர்கள்
1 / 5

1. பிரம்ம கமல மலர்கள்

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் திருப்பத்தூரில் அன்பு என்பவரின் வீட்டில் கொத்து கொத்தாக பூத்து மலர்வதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.பிரம்ம கமல மலர்கள் இந்துக்களால் புனித மலராக வணங்கப்படுகிறது. கடவுளான பிரம்மாவின் பெயரால் அழைக்கப்படும் இந்த மலர்கள் ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. இந்த பூக்கள் பூப்பதைப் பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று மக்கள் கூறுகிறார்கள். இந்த புனித மலர் பற்றிய குறிப்பு புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow