திருமண வீடு மரண வீடாக மாறிய சோகம்!.. கஞ்சா போதையில் இளைஞர் குத்தி கொலை
Coimbatore : அண்ணனின் திருமண விழா அன்று, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Coimbatore : கோவை, உக்கடம் கெம்பட்டி காலணி பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் செட்டிவீதி பகுதியில் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில். தனது அண்ணன் ரங்கராஜ் திருமணம் நடைபெறுவதால், நேற்று இரவு கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
மேலும், மது அருந்தியதுடன் கஞ்சா புகைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, போதையில் அசோக் நகர் பாலாஜி அவன்யூ பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்ஜய், ஆகியோர் தனது நண்பர்களுடன் மது அருந்தி, கஞ்சா போதையில் கோகுலிடம் தகறாரில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்ஜய் தரப்பினர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கோகுலை குத்தி விட்டு தப்பி உள்ளனர். இதில் இரத்தம் சொட்ட, சொட்ட கோகுல் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு குழியில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
அண்ணன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமண வீடு மரண வீடாக மாறி உள்ள சமவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு காரணமான நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்ஜய் ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் முதல்கட்ட விசாரணையில் தாங்கள் பணி செய்யும் இடத்தில் அதிக ஒளி எழுப்பி பாடல் வைத்ததில் ஏற்பட்ட தகறாரில் இந்த கொலை நடைபெற்றதாக தெரியவந்தது.
What's Your Reaction?