தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது.. போலீஸ் அதிரடி!

Armstrong Assassination Case in Tamil Nadu : வழக்கறிஞர் சிவா மூலம் கொலைக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது.. போலீஸ் அதிரடி!
Another Lawyer Arrested In Armstrong Assassination Case

Armstrong Assassination Case in Tamil Nadu : பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பான சென்னை மாநகரில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை கைது செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கள்ளக்காதலியான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. 

இதன்பின்பு ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அருளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

வழக்கறிஞர் சிவா மூலம் கொலைக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது ரவுடி ரவுடி சம்போ வழக்கறிஞர் சிவா மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சிவா வீட்டில் இருந்து ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சிவாவுடன் சேர்த்து 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.