கழுத்து வலி, முதுகுவலி நீக்கும் யோகா.. ஆபீஸ் போறவங்க கண்டிப்பா செய்யுங்க... இல்லைனா இழப்பு உங்களுக்குத்தான்!
Yoga Asanas For Neck Pain : முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு வலியை குறைக்கும் யோகாசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
Yoga Asanas For Neck Pain : இப்போ இருக்குற வேகமான காலக்கட்டத்துல உட்கார்ந்து 5 நிமிஷம் பொறுமையாக சாப்பிட கூட யாருக்குமே நேரம் இல்லை. சரியான சப்பாடு, சரியான தூக்கம் எதுவும் இல்லைனாலும் உடல் உழைப்பு மட்டும் அதிகமா கொடுக்குறோம். அதுவும் இப்போ இருக்குற ஐடி சூழல்ல காலையில 9 மணிக்கு சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்தா இரவு 10 மணிக்குதான் எழுந்திரிக்க முடியுது. இந்த மாதிரியான Lifestyle நமக்கு இல்லாத பொல்லாத நோய்களை அள்ளி தருது. என்ன வேலை பார்த்தாலும், எவ்வளவு வேலை பார்த்தாலும், எத்தனை commitment இருந்தாலும் நமக்காக, நம்ம உடலுக்காக, மனதுக்காக தினமும் ஒரு 30 நிமிடங்களாவது ஒதுக்கியே ஆகனும். உடல் வலிமையும் மன வலிமையும் இருந்தால் மட்டுமே உங்க வாழ்க்கை மற்றும் career growth சிறப்பாக இருக்கும்.
Gen Z உணவு பழக்க முறையாலும் நீண்ட நேரம் சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்தே வேலை பார்க்குறதுனாலும் இப்போ உள்ள தலைமுறையினர் அதிகமா சந்திக்கக்கூடிய பிரச்சனை கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு வலி. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேல உட்கார்ந்தே வேலை செய்றவங்களோட வாழ்நாள் குறைவதா ஆராய்ச்சிகள் சொல்லுது. இதற்கு யோகா சிறந்த தீர்வு தருவதாக மருத்துவர்களே பரிந்துரை செய்றாங்க. இதுக்குனு நீங்க தனியா பணம் கட்டி யோக கிளாஸ் எல்லாம் போக வேண்டாம். தினமும் ஒரு 20 - 30 நிமிஷம் ஒதுக்கி வீட்டிலேயே செய்யலாம். தினமும் நீங்க யோகா செய்றதால உங்க மனது ஒருநிலையாகும், உங்க வேலையிலும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
பணிச்சுமை காரணமா கிட்டத்தட்ட 40% இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட யோகா மற்றும் தியானம் உதவுவதாக கூறப்படுகிறது. Stress, Tension காரணமாக இளம் தலைமுறையினர் Depression, anxiety உள்ளிட்ட பல மனப் பிரச்சனைகளால அவதிப்பட்டுட்டு இருக்காங்க. இது எல்லாத்துக்குமே யோகா ஒரு சிறந்த தீர்வா அமையுது.
சரி இப்போ முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு வலியை குறைக்கும் யோகாசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்!
யோகா செய்ய ஆரம்பிக்கிறது முன்னாடி ஒரு வசதியான, அமைதியான இடத்துல பாய் அல்லது யோகா மேட்- தரையில் விரிச்சுக்கோங்க. மிகவும் டைட்டான ஆடைகள் அணியாமல் கொஞ்சம் லூசான காற்றோட்டமான ஆடைகள் அணிந்துக்கொள்ளலாம். இதனால உடலில் ரத்த ஓட்டம் சீறாக இருக்கும்.
தடாசனம்:
முதலில் நேராக நின்று கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே நேராக தூக்கிக்கோங்க. இதையடுத்து கணுக்கால்களை உயர்த்தி நில்லுங்க. இதே மாதிரி மூன்று முறை கைகளை உயர்த்தியபடியே செய்யுங்க. இந்த ஆசனம் செய்வதன் மூலம் முதுகு தண்டுக்கு ரத்த ஓட்டம் சீறாக செல்லும். இதனால் முதுகுவலி வெகுவாகக் குறையும்.
புஜங்காசனம்:
இந்த ஆசனம் செய்றதுக்கு முதலில் குப்புற படுத்துக்கோங்க. இதுக்கு அப்பறம் படத்தில் காட்டியது போல உங்க கைகளால இரண்டு கால்களையும் உடலை பின்னோக்கி வளைத்தவாறு பிடித்துக்கொண்டு அண்ணாந்து பார்க்க வேண்டும். இதே மாதிரி மூன்று முறை செய்து வந்தால், முதுகில் உள்ள தசை வலுப்பெறும்.
மர்ஜரி ஆசனம்:
படத்தில் காட்டியது போல, உங்க கைகளையும் மூட்டுகளையும் தரையில் ஊன்றி நின்றுகொள்ளுங்கள். இதையடுத்து மூச்சை உள் இழுக்கும்போது, முதுகை கீழ் பக்கமாகவும், மூச்சை வெளியிடும்போது முதுகை மேல் பக்கமாகவும் வளைக்க வேண்டும். இந்த பயிற்சியை 10 - 20 முறை செய்து வந்தால் கழுத்து மற்றும் முதுகு வலி இருக்குற இடம் தெரியாம பறந்து போகும்.
அவ்வளவுதான்! எளிமையான இந்த பயிற்சிகளை தினமும் சோம்பேறி பார்க்காமல் செஞ்சீங்கனா, நீண்ட நாட்களா உங்களை பாடாய் படுத்துன உடல் வலி எல்லாம் ஓடியே போய்விடும். நிச்சயம் முயற்சி செய்து பாருங்க.
What's Your Reaction?