உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

Dec 13, 2024 - 12:35
Dec 13, 2024 - 12:42
 0
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !
சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் மிகக்குறைந்த வயதில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சிங்கப்பூரில் தொடங்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது. 

உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலமாக டி. குகேஷ் உலக செஸ் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதிய 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் மோதினார். முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்தடுத்து 7 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 

இதில், குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர். இந்த சுற்று பெரும்பாலும் டிராவை நோக்கி செல்வது போன்றே தெரிந்தது. கடைசி போட்டியும் டிராவில் முடியும் என விஸ்வநாதன் உட்பட பலரும் கருத்து தெரிவித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், போட்டியின் 58-வது நகர்த்தலின் போது குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். 

55-வது நகர்த்தலின்போது டிங் லிரென், ரூக்கை (யானை) எஃப் 2-க்கு நகர்த்தி பெரிய தவறை மேற்கொண்டார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ் அடுத்தடுத்த நகர்வுகளை அற்புதமாக கையாண்டதன் மூலம், டிங் லிரெனை ராஜா மற்றும் சிப்பாய் உடன் விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளினார். இந்த நகர்வுகளில் டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன்மூலம் 7.5 - 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 

இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்,

சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த டிங் லிரென் ரூ.10.13 கோடியை பெற்றார். குகேஷுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக செஸ் சாம்பியன் பட்டம் மட்டுமல்லாமல், இந்த ஆண்டு குகேஷ் கேண்டிடேட்ஸ் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்டவைகளில் தங்கமும் வென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow