சென்னையில் இந்தியா-வங்கதேச டெஸ்ட்.. இன்று டிக்கெட் விற்பனை.. எவ்வளவு விலை?.. எப்படி புக் செய்வது?

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Sep 9, 2024 - 07:08
 0
சென்னையில் இந்தியா-வங்கதேச டெஸ்ட்.. இன்று டிக்கெட் விற்பனை.. எவ்வளவு விலை?.. எப்படி புக் செய்வது?
Chennai Chepauk Stadium

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (செப்டம்பர் 9ம் தேதி) காலை 9.45 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. https://insider.in என்ற இணையதளம் வாயிலாக இந்தியா-வங்கதேச முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். 

போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1,000 முதல் ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் விலை முழு விவரம்: C, D & E Lower tiers - ரூ.1,000, I, J & K Upper tiers - ரூ.1,250, I, J & K Lower tiers - ரூ.2,000, KMK Terrace - ரூ,5,000, C, D & E Hospitality Box (A/C) - ரூ.10,000, J Hospitality Box (A/C) - ரூ.15,000.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று இரவு அறிவித்தது. 

உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். பிசிசிஐ அறிவித்த 16 பேர் கொண்ட அணி வீரர்கள் பின்வருமாறு:- 

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யஷ் தயாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow