அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறதா?...அடுத்த வருடம் கேளுங்கள்...மழுப்பிய பிரேமலதா

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.

Mar 18, 2025 - 14:35
Mar 18, 2025 - 15:04
 0
அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறதா?...அடுத்த வருடம் கேளுங்கள்...மழுப்பிய பிரேமலதா

அதிமுகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு  தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

அதிமுக- தேமுதிக கூட்டணி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு  கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.

Read more: 5 மாதம் சம்பளம் இல்லை.. கண்டுகொள்ளாத அரசு.. போராட்டத்தில் இறங்கிய தொ.மு.ச!

தமிழக அரசின் கடந்த நான்காண்டு செயல்பாடுகளை பொறுத்தவரை நிறை, குறை என இரண்டும் கலந்ததாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும், கூட்டணியை ஒருங்கிணைப்பதில் திமுகவை போல அதிமுகவின் செயல்பாடு  உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். 

தேமுதிகவிற்கு ராஜ்யசபா இடம்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா இடம் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே கூட்டணி சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவித்திருக்கிறேன். எனவே தேமுதிக, அதிமுக முடிவை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறினார். இதனால் அதிமுக, தேமுதிக கூட்டணி விரிசல் விழுந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் அதிமுக கூட்டணி தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்படுகிறது.இதன்காரணமாக வரும் 2026ம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more :சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow