"திமுக அவ்வுளவுதான்.." "அடுத்த தேர்தல் தவெகவுக்கு..." PK சொல்லும் அதிரடி கணிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஏற்பட்ட நிலை தான் திமுகவுக்கு ஏற்படப்போகிறது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அப்படி ஆந்திர அரசியல் களத்தில் நடந்தது என்ன? பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணிப்பு என்ன? விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பாரா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

Mar 4, 2025 - 15:36
Mar 5, 2025 - 12:23
 0
"திமுக அவ்வுளவுதான்.." "அடுத்த தேர்தல் தவெகவுக்கு..." PK சொல்லும் அதிரடி கணிப்பு!

1949ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையால் தொடங்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகம். இக்கட்சி பெரியாரின் சிந்தனைகள், அண்ணாவின் வழிகாட்டுதல், கலைஞரின் எழுத்துக்களால் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டது. இதனால் காலப்போக்கில் திராவிடர்கள் வாழும் இடம் தமிழ்நாடு என்ற தனி முழக்கமுமே கூட உருவானது. இப்படி பல காலங்களாக பல போராட்டங்களை, அரசியல் களங்களையும் சந்தித்துள்ளது தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகள்...

இப்போது அந்த திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு “யார்ர அந்த பையன், நான் தான் அந்த பையன்” என எண்ட்ரீ கொடுத்திருக்கிறார் விஜய். அதுமட்டுமில்லாது பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆண்டு வரும் தமிழகத்தில் இருவரின் கூட்டணியும் வேண்டாம் என்ற முடிவையும் விஜய் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனால், மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்காமல், தனித்து போட்டியிட்டால், அது திமுகவின் வெற்றிக்கு தானே வழிவகுக்கும் என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தனித்து போட்டியிட்டாலும் விஜய் தமிழ்நாட்டில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் எனவும், ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையே திமுகவுக்கு தமிழ்நாட்டில் ஏற்படும் எனவும் தனியார் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் 2019 சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளை வெற்று அதிரடி காட்டியது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். ஆனால் 2024ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளையே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அதிரடியாக வெற்றது. 

ஒய்.எஸ்.ஆர் கட்சியின் இந்த படுதோல்விக்கு, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் அதீத கடன், சந்திர பாபு நாயுடுவின் மனைவியை தவறாக பேசியது, தொழில் வளம் இல்லை என எழுந்த குற்றச்சாட்டுகள், மக்கள் வெறுக்கும் வேட்பாளர்களை மீண்டும் அடுத்த தேர்தலில் களமிறக்கியது என பல காரணங்கள் சொல்லப்பட்டது. முன்னதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியையே சந்திக்கும் என கணித்திருந்தார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அவர் கூறியது போலவே ஆந்திராவின் அரசியல் களம் மாறியது.

இந்நிலையில் இதே போன்ற நிலை தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கு ஏற்படும், திமுக படுதோல்வியை சந்திக்கும், தங்களுக்கு தேவையில்லாதவர்களை மக்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் கணித்தது போல, வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று தமிழ்நாட்டை விஜய் ஆளப்போகிறாரா, அல்லது திராவிடக் கட்சிகளே மீண்டும் ஆட்சியமைக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow