காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி
சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்த பாலியல் வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அதனை முடித்து வைக்கக் கோரி சீமான் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் சீமான் மீதான வழக்கு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் தான் காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் அளித்துள்ளேன் எனவும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக தனது பக்கமாக தான் தீர்ப்பு வரும் என நம்புவதாகவும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். தன்னை மனநோய் என தெரிவித்த சாட்டை முருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி பல குற்றச்சாட்டுகளை சாடியுள்ளார்.
What's Your Reaction?






