மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் மீது மனைவி புகார் அளித்த நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் அலைக்கழிக்கப்படும் வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தற்போது அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jan 21, 2025 - 12:37
Jan 21, 2025 - 13:08
 0
மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!
குடிபோதையில் மனைவியை சிலிண்டரால் கொடூரமாக தாக்கிய கணவன் கைது..

சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் கிருஷ்ண குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி சுகந்தி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். அதே பகுதியில் உள்ள பேக்கிரி ஷாப்பில் வேலை செய்து வருகிறார். 

கிருஷ்ணகுமார் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி சுகந்தியை அடித்து கொடுமை படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி கிருஷ்ண குமார் குடித்து விட்டு வந்து
மனைவி சுகந்தியை காலி சிலிண்டரை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து சுகந்தி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பதால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நாட வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது கணவன் மனைவி பிரச்சினை என்பதால் சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழிப்பு செய்துள்ளனர்.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் சுகந்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையங்களுக்கு அலைந்த காட்சிகளை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியானது.  உயர் அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில் , விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்  வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 2 பி.ரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புகாரை தொடர்ந்து, விருகம்பாக்கம் போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது  கடுமையான தண்டனைகளை வழங்க வழிவகையும் செய்யும் வகையில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக புகார் அளித்தும் காவல் நிலையங்களுக்கு அலைகழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow