Neela Nira Sooriyan Review : அரவிந்த் என்ற பள்ளி ஆசிரியர் பானுவாக மாறும் கதை. சம்யுக்தா விஜயன் இயக்கி, அவரே நடித்துள்ளார்
Neela Nira Sooriyan Review Tamil : கோவையில் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றும் அரவிந்த் மாற்றத்துக்கு மனதளவில், உடலளவில் தயார் ஆகிறார். அதாவது, கடும் எதிர்ப்புகள், விமர்சனங்களை மீறி திருநங்கை பானுவாக மாறுகிறார். பள்ளியில், வீட்டில், சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? அதை எப்படி சமாளிக்கிறார் என்பது கதை
நீல நிறச்சூரியன், ரேட்டிங் 3.5/5
Neela Nira Sooriyan Review Tamil : காதல், காமெடி, ஆக் ஷன், பேய், குடும்ப கதைகளை தாண்டி அவ்வப்போது தமிழில் மாற்று சினிமா வரும். அப்படி வந்துள்ள படம் நீல நிறச்சூரியன். சம்யுக்தா விஜயன் இயக்கி, அவரே 2 மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என 3 பணிகளை செய்துள்ளார்.
சரி, அப்படி என்ன வித்தியாசமான கதை. கோவையில் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றும் அரவிந்த் மாற்றத்துக்கு மனதளவில், உடலளவில் தயார் ஆகிறார். அதாவது, கடும் எதிர்ப்புகள், விமர்சனங்களை மீறி திருநங்கை பானுவாக மாறுகிறார். பள்ளியில், வீட்டில், சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? அதை எப்படி சமாளிக்கிறார் என்பது கதை. திருநங்கையான சம்யுக்தா விஜயனே இந்த படத்தை இயக்கி,, அவரே அரவிந்த், பானுவாக நடித்து இருப்பது கூடுதல் சிறப்பு.
அரவிந்தின் பள்ளி காட்சிகள், அவர் திருநங்கையாக மாற டிரீட்மென்ட் எடுப்பது, மனதளவில் தயார் ஆவது, சக டீச்சரும் தோழியான ஹரிதாவிடம் ஆலோசனை கேட்பது மனரீதியிலான பயம், கேள்விகள் என படம் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் அரவிந்த்துக்கு பெண் பார்க்க ஆரம்பிக்க, பானுவாக மாறுவது என்று முடிவெடுக்கிறார். பள்ளி நிர்வாகத்திடம் இது பற்றி சொல்லும்போது, நேற்றுவரை ஒரு ஆண் ஆசிரியர், இன்று பெண்ணாக மாறினால் அது பள்ளியில் இமேஜை பாதிக்கும், மாணவர்களை பாதிக்கும் என்று பள்ளி முதல்வர், துணை முதல்வர் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், முற்போக்கான பள்ளி தாளாளர் அது அவர் விருப்பம், பள்ளிக்கு பிரச்னை வராது என்கிறார். திடீரென ஒருநாள் சேலை கட்டி, பெண்ணாக மாறிவிடுகிறார் அரவிந்த். பள்ளியில், குடும்பத்தில் சுற்றுவட்டாரத்திலும் அரவிந்த்தை பானுவாக ஏற்க மறுக்கிறார்கள். சக ஆசிரியர்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் தங்கள் பாத்ரூமை பானு பயன்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பானுவை பள்ளியை விட்டு துரத்த முயற்சிக்கிறார்கள். திருநங்கை சான்றிதழ் வாங்கும் அரசு அலுவலகத்திலும் அவமானம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பானு என்ன முடிவெடுக்கிறார். அவருக்கு என்ன நடக்கிறது என்பதை அழுத்தமான, வித்தியாசமான அதேசமயம், ஓரளவு சுவாரஸ்யமான சினிமாவாக கொடுத்து இருக்கிறார் சம்யுக்தா விஜயன்
அரவிந்த்தாக அவர் பயப்படுகிற, கேள்வி கேட்கிற சீனில், பெண்ணாக மாறி அவமானங்களை, கிண்டல், கேலியை சந்திக்கிற சீன்களில் நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார். குறிப்பாக, தனது இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார். எங்கேயும் பெரிதாக கோபப்படாமல் அமைதியாக பேசுவது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கடைசியில் தன்னை புறக்கணித்தவர்களையும் மீடியாவி்ல் பெருமையமாக பேசுவது என்று நடிப்பில் கலக்கியிருக்கிறார். பானு தோழியாக வரும் ஹரிதா, அம்மாவாக வரும் கீதாகைலாசம், அப்பாவாக வரும் கஜராஜ், உறவினராக வரும் பிரசன்னா, பள்ளி துணை முதல்வர் மணிமே கலை உட்பட பலரும் சரியான தேர்வு. ஒரு சீனில் டாக்டராக வரும் கிட்டியும் நடிப்பும் பிரமாதம். இந்த கதைக்கு நடுவே இப்படிப்பட்ட மன பிரச்னையில் தவிக்கும் இன்னொரு மாணவன் கதையையும், நண்பர்களால் அவன் சந்திக்கும் பிரச்னைகளையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். செம்மலர் அன்னம் கேர க்டர் மூலம் பெண்களில் பிரச்னை, குழந்தை யின்மை என பல விஷயங்களையும் படம் பே சுகிறது.
படத்தின் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என மூன்றையும் ஸ்டீவ் பெஞ்சமின் என ஒரு நபரா செய்தார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. அதிகம் சினிமாத்தனம் இ்ல்லாமல், நாடகத்தனம் இல்லாமல் ஒரு கதையை அழகான சொல்லியிருக்கிறது நீலநிறச்சூரியன். இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது. திருநங்கைகள், அப்படி மாற நினைப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. நம் சமூகம், குடும்பம் அவர்களை எப்படி பார்க்கிறது என்ற கோணமும் நச். மாணவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், பானு நடனம் ஆடும் காட்சி, சக ஆசிரியரின் ஆசை போன்ற சீன்கள் புதுமை. கிளைமாக்சில் பெ ரிய திருப்பம் வரப்போகிறது என்று நினைத்தால், ஒருவித அழுகையுடன் படத்தை முடித்து இருப்பது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், ஒரு படைப்பாளியின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது
ஆண்டுக்கு எத்தனையோ படங்களை பார்க்கிறோம். கேரக்டர்களை ரசிக்கிறோம். சில படங்கள் மட்டுமே பல ஆண்டுகள் மனதில் நிற்கும். அப்படி மனதில் நிற்கும் படமாக நீலநிறச்சூரியன் மாறுபட்ட கோணத்தில், ஒரு சமூக பார்வையுடன் விழிப்புணர்வு படமாக தந்து, தனது வலியை, ஆதங்கத்தை, தனது பார்வையை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் சம்யுக்தாவிஜயன். ஒரு இயக்குனராக, நடிகராகவும் ஜெயித்து இருக்கிறார். தமிழில் திருநங்கைகள் கு றித்து இப்படிப்பட்ட ஆங்கிளில் எந்த படமும் வந்தது இல்லை. இது புது முயற்சி.
**
What's Your Reaction?