Dwayne Bravo : ஓய்வு பெற்றதும் தேடி வந்த பதவி.. சி.எஸ்.கே.வில் இருந்து கே.கே.ஆர். சென்ற பிராவோ

Dwayne Bravo : மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோ, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெறுவதாக அறிவித்ததை அடுத்து, கே.கே.ஆர். அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sep 27, 2024 - 14:27
Sep 27, 2024 - 16:24
 0
Dwayne Bravo : ஓய்வு பெற்றதும் தேடி வந்த பதவி.. சி.எஸ்.கே.வில் இருந்து கே.கே.ஆர். சென்ற பிராவோ
கே.கே.ஆர். அணியின் வழிகாட்டியாக பிராவோ நியமனம்

Dwayne Bravo : மேற்கிந்திய தீவுகள் அணி ஜாம்பவான் டுவைன் பிராவோ, கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். நீண்ட காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய தூணாக விளங்கியவர் ட்வைன் பிராவோ. பின்னர், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து, சென்னை அணியில் இருந்து விலகி கடந்த 2024 ஐபிஎல்-இல் வழிகாட்டியாக செயல்பட்டார்.

மேலும், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடாவிட்டாலும், உள்ளூர் டி20 தொடரான கரீபியன் லீக் தொடரில் விளையாடி வந்தார். இந்நிலையில், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். 40 வயதாகும் பிராவோ இதுவரை, அதிக டி20 போட்டிகளில் விளையாடிவராக உள்ளார். 582 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 6,970 ரன்களையும், 631 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.

பிராவோ ஓய்வை அறிவித்ததை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவி காலியாக இருந்தது. கவுதம் கம்பீர் தலைமையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் தனது மூன்றாவது கோப்பையைக் கைப்பற்றியது. கொல்கத்தா அணியின் மிகப்பெரும் பலமாக இருந்தவர் கௌதம் கம்பீர்தான். 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி இவரது தலைமையில்தான் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த டுவைன் ப்ராவோவை புதிய ஆலோசகராக நியமித்திருக்கிறது கொல்கத்தா அணி. இது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது. அதேபோல், சென்னை அணியும் பிரவோவிற்கு விடைகொடுத்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. சிறந்த ஆல் ரவுண்டரான பிராவோவின் வருகை, கொல்கத்தா அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow