சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

ICC சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேசம் அணியை எதிர்த்து மோதுவதாக இருந்தது. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்திருந்தன. இதனால் நேற்றைய போட்டி இவ்விரு அணிகளுக்கும் கடைசி ஆட்டமாக இருந்தது. இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் முனைப்பில் இருந்தன.
இதனிடையே, ராவல்பிண்டி பகுதியில் பெய்த மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டு ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளின் பயணம் முடிவுக்கு வந்தது.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல், தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோல்வியும், வங்க தேசத்துக்கு எதிரான போட்டி ரத்தானதால் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடம் பிடித்துள்ளது.
கடைசியாக நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியனான பாகிஸ்தான், இந்ததொடரில் ஒரு புள்ளி கூட பெறாமல் வெளியேறியிருந்தால் வரலாற்றிலேயே மோசமான நிகழ்வாக அமைந்திருக்கும். மழையின் தயவால் பாகிஸ்தானுக்கு ஒரு புள்ளி பெற்றது.
இத்தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இவ்வாறு பல மோசமான சாதனைகளை செய்து இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
What's Your Reaction?






