தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

Mar 6, 2025 - 12:32
Mar 6, 2025 - 12:58
 0
தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு
தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. 

Read More: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டுட்

தோனியை விட விராட் சிறந்தவர்

'குரூப் ஏ பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய அணி, வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை லீக் போட்டிகளில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில், தோனியை விட விராட் கோலி சிறந்தவர். குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் பாராட்டியுள்ளார். மேலும் ஃபைனலில் விளையாடும் நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாமல் கவனத்துடன் செயல்பட்டால் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கபில் தேவ் கூறியுள்ளார். 

Read More: 8 அமைச்சர்கள்... 4 டீம்...! அமித்ஷா கையில் ஹாட் ரிப்போர்ட்..? ஷாக்கில் திமுக...!

பெரிய சவாலை சமாளிப்பதற்கான தன்மை விராட் கோலியிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். சவால்களின் மூலமாக அவர் தனக்கான எனர்ஜியைப் பெறுகிறார்.  அழுத்தம் நிறைந்த ஆடுகளத்தில் விளையாடுவதை விராட் விரும்புகிறார். இதுபோன்ற குணம் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை விராட் கோலியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

“அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதைச் செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் விளையாடும் மற்றொரு அணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஆட்ட நாயகன் விராட்

பாகிஸ்தானுக்கு எதிராக 250 ரன்களை சேசிங் செய்து, சதமடித்த  விராட் இந்திய அணியின் வெற்றிக்கு  தனி ஆளாக போராடினார்.  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், 84 ரன்கள் எடுத்த விராட் அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.  2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியிடம் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியை விட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர்.  

சமீப காலமாக தனது ஃபார்மை இழ்ந்து தடுமாறி வந்த விராட் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். தொடர்ந்து, தற்போது அதிரடியாக விளையாடி வரும் விராட் கோலிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

இறுதிப்போட்டி 

2025 சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் 9ஆம் தேதி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow