சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவருவதற்கான பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிந்த நிலையில், அதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடுத்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

Mar 6, 2025 - 11:03
Mar 6, 2025 - 11:13
 0
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

கடந்த வருடம் ஜூன் மாதம் 6-ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

Read More: பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

விண்வெளி மையத்தில் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கு நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் வரும் மார்ச் மாத இறுதியில், இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. 

எலான் மஸ்க் குற்றசாட்டு

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்க முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டதாகவும், பின்னர் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் இருவரும் விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், ஜோ பைடன் அரசு அவர்களை அழைத்து வரும் பணியை திட்டமிட்டே கைவிட்டுவிட்டதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

Read More: ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

இதுகுறித்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு டிராகன் விண்கலத்தை  6 மாதங்களுக்கு முன்பே அனுப்பி அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தயாராக இருந்தது. ஆனால், அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜோ பைடன் மறுத்துவிட்டதாக மஸ்க் கூறியுள்ளார். ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் விண்வெளியில் உள்ள  விண்வெளி வீரர்கள் இருவரையும் உடனடியாக அழைத்து வரவேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் (க்ரூ-10) விண்கலன் பூமியில் இருந்து மார்ச் 12-ம் தேதி விண்வெளிக்கு சென்று, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் பூமி திரும்ப உள்ளதாகவும், அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow