“எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது” - பி.டி.உஷாவை வெளுத்து வாங்கிய வினேஷ் போகத்
பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, மருத்துவமனையில் பி.டி.உஷா தன்னை சந்தித்ததற்கு பின்னால், அரசியல் இருந்தது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை கோலகமாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில், சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
ஒலிம்பில் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பந்தகங்களை வென்று, அதிக பதக்கங்கள் வென்று நாடாக அமெரிக்கா ஐக்கிய குடியரசு முதலிடத்தை பிடித்தது. 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களை வென்று சீனா மக்கள் குடியரசு இரண்டவது இடத்தையும், 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
அதேபோல 18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4ஆவது இடத்திலும், போட்டியை நடத்திய நாடான ஃபிரான்ஸ், 16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் 64 பதக்கங்களுடன் 5ஆவது இடத்தையும் பிடித்தன. மொத்தம் 206 நாடுகள் பங்கேற்ற நிலையில், 84 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பகக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது. ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றது.
இதற்கிடையில், ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டடியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இதனையடுத்து இறுது போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததை, அறிந்து கொண்ட வினேஷ் போகத், உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டார்.
தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 கிலோ எடையை குறைத்துள்ளார். முடிவில், 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினித் போகத்தை, தடகள வீராங்கனையும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் உள்ள பி.டி. உஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வினேஷ் போகத்தை, பி.டி.உஷா சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பரவியது.
இந்நிலையில், பாரிஸில் எனது அனுமதி இல்லாமல் என்னுடன் புகைப்படம் எடுத்து பி.டி.உஷா வெளியிட்டார் என்று வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள வினேஷ் போகத், “அங்கே எந்த ஆதரவும் இருந்தாக எனக்கு தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனையில் சந்தித்தார். அப்போது, புகைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது.
நீங்கள் சொன்னது போல், அரசியலில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிறைய நடக்கிறது. அதேபோல, பாரிஸ் ஒலிம்பிக்கிலும் அரசியல் நடந்தது. அதனால், நான் மனமுடைந்து போனேன். மற்றபடி நிறையபேர் ‘மல்யுத்தை விட்டுவிடாதே’ என்று கூறினர். நான் ஏன் நான் அதை தொடர் வேண்டும்? இங்கே எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “மருத்துமனை படுக்கையில் நீங்கள் இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களில் ஒன்றை நீங்கள் கடந்து செல்லும்போது, வாழ்க்கைக்கு வெளியே என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று உங்களால் அறிந்துகொள்ள முடியாது.
அந்த இடத்தில், என்னுடன் நிற்கிறீர்கள் என்பதை அனைவருக்கும் காட்டுவதற்காக, என்னிடம் சொல்லாமல் ஒரு புகைப்படத்தை கிளிக் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்கிறீர்கள்.. இப்படித்தான் நீங்கள் ஆதரவு தெரிவிப்பதா. அப்படி இருப்பதாக காட்டிக்கொள்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






