விஜயகாந்த் ஸ்டைலில் விஜய்.. அன்றே அலறவிட்ட கேப்டன்..2005 சம்பவம் நினைவிருக்கா?
இப்போ இணையத்தளத்த திறந்தாலே அங்க தவெக மாநாடும், தளபதி விஜய்யும் தான் டிரெண்டிங்கே. ஒரு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு ஹைப்-னு நீங்க யோசிக்கலாம். ஆனா இதவிட பெரிய ஹைப் சோஷியல் மீடியா இல்லாத காலத்துலயே, அதாவது 2005லயே ஒரு மாநாட்டுக்கு இருந்துச்சு. வழக்கமா மாநாடுகள பெரிய அளவுல செய்ற அதிமுக, திமுக மாநாடு இல்ல. கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு திடீர்னு சொல்லி அதுக்கு ஒரு மாநாட்ட நடத்து கேப்டன் விஜயகாந்தோட மாநாடு தான் அது.
இப்போ இணையத்தளத்த திறந்தாலே அங்க தவெக மாநாடும், தளபதி விஜய்யும் தான் டிரெண்டிங்கே. ஒரு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு ஹைப்-னு நீங்க யோசிக்கலாம். ஆனா இதவிட பெரிய ஹைப் சோஷியல் மீடியா இல்லாத காலத்துலயே, அதாவது 2005லயே ஒரு மாநாட்டுக்கு இருந்துச்சு. வழக்கமா மாநாடுகள பெரிய அளவுல செய்ற அதிமுக, திமுக மாநாடு இல்ல. கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு திடீர்னு சொல்லி அதுக்கு ஒரு மாநாட்ட நடத்து கேப்டன் விஜயகாந்தோட மாநாடு தான் அது.
2005... அதிமுக திமுக மட்டுமே ஆதிக்கம் செலுத்திட்டு வந்த தமிழ்நாடு அரசியல்ல மூன்றாவதா கட்சி தொடங்கப்போறேன்னு சொல்லி கட்சி பெயர அறிவிக்க மதுரை திருநகர்ல ஒரு மாநாட்ட நடத்துனாரு கேப்டன் விஜயகாந்த். தமிழ்நாட்டுல புதிய கட்சியா அப்படினு லைட்டா ஷாக்ல இருந்துச்சு அதிமுக, திமுக கட்சிகள். இந்த மாநாட்டுக்காக பல பெரிய பெரிய எல்.இ.டி-க்கள், இதுவர எந்த மாநாட்டுலையும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சர்களோட கட்அவுட்-னு சும்மா ஏற்பாடுகள்லாம் பயங்கரமா இருந்துச்சு.
செப்டம்பர் 14 2025. மாநாடு தினம். அன்னைக்கு மொத்த மதுரையும் தொண்டர்கள் வருகைனால ஸ்தம்பிச்சு போச்சு. இன்னும் தெளிவா சொல்லணும்னா ரசிகர்கள் மாநாட்டுக்கு வந்துருந்தாங்க. காலையில நடக்க இருந்த மாநாட்டுக்கு நைட்ல இருந்தே தொண்டர்கள் வருகைதர மதுரையே தொண்டர்கள் வெள்ளத்தால கடலா மாறிப்போச்சுன்னு சொன்னா மிகையாகாது.
இவ்ளோ ஹைப்-க்கு மத்தியில தொண்டர்கள் வெள்ளத்த தாண்டி ஒருவழியா மேடைக்கு கேப்டன் வந்ததும் தனக்காக போடப்பட்டிருந்த அளங்கரிப்பட்ட chair-அ எடுத்துட்டு, மத்தவங்களுக்கு போட்டிருக்க மாதிரி தனக்கும் பிளாஸ்டிக் chair போட சொல்லி, மக்கள் மனசுல நிரந்தரமா ஒரு சேர் போட்டு உட்கார்ந்துட்டாருன்னுதான் சொல்லணும்.
இதுக்கு அப்புறம் கட்சி கொடிய ஏற்றி கட்சி பெயர அறிவிச்சாரு. அதுக்கு ஒரு ஒரு தொண்டரும் புரட்சி கலைஞர் வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்கன்னு மதுரையே அதிர்ந்து போற அளவிற்கு முழக்கமிட்டாங்க. எப்படி ஒரு படத்துல மாஸ் எண்ட்ரீ ஹீரோக்கு இருக்குமோ அதே மாதிரியான ஒரு மாஸ் மொமண்ட் தான் கேப்டன் விஜயகாந்த் மாநாட்டு மேடையில பேச வரப்போ நடந்துச்சு.
அப்போ பேசிய விஜயகாந்த், ”நாம யாரு, எப்படிப்பட்டவங்கன்னு இந்தியாவுக்கே தெரியப்படுத்தணும். கட்சியின் பெயர உங்களால பிரபலமாக்க முடியும். நானும் மற்ற கட்சி மாதிரி 2 நாள் 3 நாள் மாநாட்ட நடத்தலாம்னு நினைச்சேன், ஆனா, என்னுடைய தொண்டர்கள் பணக்காரங்க இல்ல, அவங்களாம் ஏழைகள். அதனால ஒருநாள் மாநாடு நடத்துனேன். என்னுடைய தொண்டர்கள் எல்லாம் ராணுவ வீரர்கள் மாதிரி”னு சொன்னாரு. கடைசில பேசி முடிக்குறப்போ, ”நீங்களாம் நொம்ப தூரத்துல இருந்து வந்திருப்பீங்க, சாப்பிட்டு பத்திரமா போங்க. என்னோட நினைப்பு எப்பவுமே உங்கள பத்தி தான் இருக்கும்னு சொன்னாரு. இவரோட இந்த பேச்ச கேட்டு புள்ளசிரிச்சு போன மக்கள் வானத்தையே பிளக்குற அளவுக்கு தலைவா-னு முழக்கமிட்டாங்க”. ரசிகர்கள் மத்தியில நல்ல இடத்த 2005 ல பிடிச்சவரு, இன்னுமே அவர் இறந்த பிறகும் எல்லாருடைய மனசுலயும் நீங்காம நிலைச்சு இருக்காரு.
இப்போ விஜய்காந்த் போல தான் விஜய் அரசியல் எண்ட்ரீ கொடுத்திருக்காருன்னும், விஜயகாந்த் ஸ்டைல விஜய் follow பண்றாருன்ற பேச்சும் முன்னாடில இருந்தே இருந்துட்டு வருது. அதேமாதிரிதான், விஜயகாந்த் மாநாடு மாதிரி செப்டம்பர்ல தன்னுடைய மாநாட்ட நடத்த திட்டமிட்டு சில காரணங்கள்னால அக்டோபர் 27க்கு ஒத்திவைக்கப்பட்டுச்சு.
வீடியோவை பார்க்க: விஜயகாந்த் ஸ்டைலில் விஜய்.. அன்றே அலறவிட்ட கேப்டன்
அதேமாதிரி எப்படி தேமுதிக முதல் மாநாட்டுல இதுவர இருந்த முதல்வர்களோட கட்டவுட்ட வெச்சு பக்கதுல தன்னுடைய கட்டவுட்ட விஜயகாந்த் வெச்சாரோ, அதே மாதிரி இப்ப விஜய்யும் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர் கட்டவுட் வெச்சு பக்கத்துல தன்னுடைய கட் அவுட்ட வெச்சிருக்காரு விஜய். தேமுதிக மாநாட்டுக்கு இருந்தது போல, தவெக மாநாட்டுக் வேற லெவல் ஹைப் கிடைக்குதா, தேமுதிக போல தவெகவும் பிரதான கட்சியா மாறுதான்றத பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?