விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

தவெக தலைவர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Mar 8, 2025 - 17:40
Mar 8, 2025 - 17:47
 0
விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்
விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

ஷூட்டிங் நடப்பது போல அறிக்கை கொடுத்துவிட்டு செல்பவர், மக்களிடம் நேரடியாக சென்று பேசினால் தான் உண்மை நிலை புரியும், அதிமுக தமிழக வெற்றி கழகத்தின் அஜண்டா எல்லாம் விரைவில் வெளியே வரும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பெண்களுக்கான ஆட்சி என்று பெண்களால் பாராட்டப்பட்டு வரக்கூடிய நிலையில், அது நிறைய பேருக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்றார். பெண்களிடம் முதலமைச்சருக்கு கிடைக்கும் நற்பெயர்ரை கெடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பச்சைப் பொய் சொல்வதாக கூறினார். 

பெண்களின் வளர்ச்சி அதிகமாக வரும் பொழுது அதிமுக பாஜக என அனைவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, காவல்துறையில் பெண்கள் என வீட்டிலிருந்த பெண்களை வெளியே வர வைத்தது திமுக அரசு, ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பற்றி கேலி செய்தவர்கள் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் தற்பொழுது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்து இருக்கிறார்கள்.மற்ற மாநிலங்களிலும் கூட இந்தத் திட்டத்தை வேறு பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பை பொருத்தவரையிலும் முதலமைச்சர் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காத வகையில் செயல்படுகிறார். அதிமுக ஆட்சியில் வழக்கு போடுவதற்கும், எஃப்ஐஆர் பதிவு செய்வதற்குமே பெரிய போராட்டமாக இருந்தது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக தைரியமாக வந்து புகார் கொடுக்கிறார்கள். அதனால் தான் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் ஷூட்டிங் நடப்பது போல அறிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார். மக்களிடம் நேரடியாக சென்று பேசினால் தான் புரியும். அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் அஜண்டா எல்லாம் விரைவில் வெளியே வரும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow