Valentines Day 2025 : காதலில் சொதப்பாமல் இருக்க டிப்ஸ்.. Valentine's day கிப்ட்ஸ்
Valentines Day 2025 Special Gifts : உலகமே அன்பாலும், காதலாலும் நிரம்பி வழியும் ஒரு தினம் தான் காதலர் தினம். இந்த காதலர் தினத்திற்கு உங்கள் மனம் விரும்பியவர்களுக்கு வழக்கம்போல ரோஜா பூ, டெட்டி பியர், போன்ற பரிசுகள் இல்லாமல் தனித்துவமான பொருட்களை பரிசளிக்க எண்ணுகிறீர்களா? இந்த தொகுப்பு உங்களுக்காகத்தான்.

Valentines Day 2025 Special Gifts : அன்பே சிவம் படத்துல ‘தாஜ் மஹால்’ இல்லன்னா எல்லாரும் காதல் பண்றத நிறுத்திருவாங்களான்னு கமல்ஹாசன் கேட்குற மாதிரிதான், யாருக்கு பிடிச்சாலும் சரி, யார் வெறுத்தாலும் சரி, இவ்வளவு ஏன்... காதல் பண்ணவேக் கூடாதுன்னு புதுசா சட்டமே வந்தாலும் சரி... இங்க காலத்துக்கும் காதல் பண்றத யாரும் கைவிடபோறதில்ல. அப்படி இயற்கைய போல இந்த உலக இயக்கத்துக்கு முக்கியமா இருக்க இந்த உணர்வ கொண்டாடத் தான் காதலர் தினம்ன்றது வருடா வருடம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுது.
அப்படியான தினத்துல புதுசா காதல சொல்லப்போறவங்களும் சரி, ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கவங்களும் சரி, திருமணமானவங்களும் சரி, உங்களோட பார்ட்னருக்கு பரிசுகள் வாங்கி தரணும்னு கண்டிப்பா யோசிக்கிறது உண்டு. ஆனா அப்படி நீங்க உங்க பார்ட்டருக்கு கொடுக்க வேண்டிய கிப்ட் சாதரணமானதா இல்லாம ஏதாவது தனித்துவமானதா இருக்கணும்னு கண்டிப்பா நினைப்பீங்க. ஆனா, என்ன வாங்குறது தெரியம இருக்கீங்கன்னா.. உங்களுக்கான ஐடியாஸ் தான் இது.
"கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதாசி...” இதுலயே என்ன கிப்ட் பத்தி சொல்லப்போறேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. காதல் மாதிரியே எப்பவுமே எவர்கிரீனான ஒன்னுனா அது கடிதம் தான்... என்னதான் இப்போ நம்ம materialistic உலகத்துல வாழ்ந்தாலும், இன்னும் லெட்டர விலைமதிப்பற்றதா பார்க்குற ஆட்கள் இருக்கதான் செய்யுறாங்க..அதனால, உங்களுக்கு தோணுறத ஒரு லெட்டர்ல எழுதி உங்க பார்ட்னருக்கு சொல்லுங்க. என்னடா பழைய ஐடியாவா இருக்கேனு யோசிக்காம இன்னைக்கே ஒரு லெட்டர எழுதுங்க.. கண்டிப்பா இது வொர்க் ஆகும்..
இரண்டாவது ஏற்கனவே காதல் ஜோடியா இருக்கவங்களுக்கு இந்த கிப்ட் ஒரு வரபிரசாதம்னு சொல்லலாம்.. couples eyeball photo frame....இந்த photo frame-அ தயாரிக்க உங்களோட விழியையும், உங்க பார்ட்னரோட கருவிழியையும் முதல்ல புகைப்படம் எடுப்பாங்க... அப்புறம் அது இரண்டையும் சேர்த்து ஒரு photo frame-ஆ போட்டு கொடுப்பாங்க.. அதாவது உங்க பார்ட்னருக்கு கிப்ட் கொடுக்கணும் ஆனா, அவங்க வீட்டுல அது தெரியாம இருக்கணும்னா இந்த கிப்ட்ட நீங்க தேர்வு செய்யலாம்..
மூன்றாவது.. Touch Vibration Bracelet... பார்க்க சாதாரணமா இருக்க இந்த பிரேஸ்லெட் long distance-ல இருக்க couples-காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு creative-ஆன கிப்ட்னு சொல்லலாம். ஆமா, நீங்க எப்பலாம் உங்க long distance பார்ட்னர மிஸ் பண்றீங்களோ அப்பலாம் இந்த பிரேஸ்லெட்ல இருக்க இந்த சூரியன் அல்லது சந்திரன தொட்டா போதும்.. அந்த இன்னொரு பிரேஸ்லெட் உங்க பார்ட்னருக்கு vibration சிக்னல் கொடுக்கும். இது மூலமா ஃபோன் பேசமுடியல மீட் பண்ணமுடியலனாலும், உங்கள பத்தின நினைப்பு உங்க பார்ட்னருக்கு இருந்துட்டே இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்...
நான்காவது.. Morse Code Jwellery piece.. விவேகம் படத்துல காஜல் அகர்வாலை வில்லன் கடத்திட்ட அப்புறம், நடிகர் அஜித் கிட்ட வீடியோ கால்ல கண்ணாலயே தன்னை எங்க கடத்தி வெச்சிருக்காங்கன்னு காஜல் அகர்வால் சொல்வாங்கல.. அதுதான் Morse Code... இந்த morse code மூலமா, உங்க பார்ட்னரோட பெயர யாருக்கும் தெரியாத மாதிரி உருவாக்கி அத ஒரு chain-ஆ இல்ல பிரேஸ்லெட்டா கொடுப்பாங்க.. so உங்க பெயர் போட்ட செயின அவங்க wear பண்ண மாதிரி இருக்கும். அதுமட்டும் இல்லாம நான் முன்னாடி சொன்ன மாதிரி உங்க பார்ட்னருக்கு கிப்ட் கொடுக்கணும் ஆனா அவங்க வீட்டுல மாட்டிக்க கூடாதுன்னா இந்த கிப்ட் ஒரு நல்ல செலக்ஷன் தான்..
ஐந்தாவது Spotify gift card... இந்த கிப்ட்ல உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இருக்க ஒரு ஸ்பெஷல் பாடல Spotify code மாதிரி போட்டு, நீங்க ஏற்கனவே எடுத்த புகைப்படத்த வெச்சு கொடுக்க முடியும்.. இந்த கார்ட்ல இருக்க Spotify codeஆ அவங்க spotify appல scan பண்ணா போதும், நீங்க அவங்களுக்கு dedicate பண்ண பாடல் play ஆகும்.. இது கிப்ட் அவங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும்..
எது எப்படியோ, முன்னாடி சொன்ன கிப்ட் எல்லாம் வாங்கி கொடுக்குறீங்களோ இல்லயோ, ஆனால் உங்க மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட காதல மட்டும் வெளிபடுத்தாம இருந்துறாதீங்க..
What's Your Reaction?






