வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி...புதுப்புது ஐடியாக்களை பயன்படுத்தும் மக்கள்
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து சந்திப்பில் தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது குழந்தைக்கு வெயிலின் தாக்கம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தாயார் கையில் கிடைத்த மூங்கில் கூடையை வைத்து தனது தலையில் வைத்தவாறு பயணித்தார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொதுமக்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.
வெயில் தாக்கம்
பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் தலைக்கவசத்தை வெயில் தாக்கத்திற்காக பயன்படுத்திவரும் நிலையில், ஏராளமான குளிர்பானங்களை அருந்தி தங்களது களைப்பை போக்கி வருகின்றனர்.பெண்கள் தங்களது சேலைகளை தலையில் போர்த்தியபடியும், ஆண்கள் கர்சிப் மற்றும் துண்டுகளை தலையில் போர்த்தியும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்கின்றனர்.
Read more: துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து சந்திப்பில் தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது குழந்தைக்கு வெயிலின் தாக்கம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தாயார் கையில் கிடைத்த மூங்கில் கூடையை வைத்து தனது தலையில் வைத்தவாறு பயணித்தார்.
புதுப்புது யுக்திகள்
இதே போன்று மதுரை பைபாஸ் சாலை பகுதியில் பைப்லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர் ஒருவர் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக அருகில் இருந்த பப்பாளி மர இலை ஒன்றை எடுத்து தலையில் தொப்பி போல போர்த்திக்கொண்டு வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்.
Read more: பாசத்தில் பாட்டி செய்த செயல் - பேரனின் கொடூரத்தால் பறிபோன உயிர்
மதுரையில் நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






