வறுமையை ஒழிப்பதற்காகவும் தமிழகம் வருகிறார்கள் - எம்.எல்.ஏ எழிலன் பேச்சு..!
பீகார் மற்றும் உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில் சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலத்தில், திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது, தமிழகத்தில் இந்தி திணிக்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால், வட இந்திய தொழிலாளர்களை தமிழகத்தில் திணித்தது திமுக தான். எனவே இன்றைக்கு இங்குள்ள மக்களும் இந்தி பேசக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு?
வளர்ந்த மாநிலத்தை நோக்கி வளர்கின்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காகவும் வறுமையை ஒழிப்பதற்காகவும் இங்கு (தமிழகம்) வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உபி, மாநிலத்தை சேர்ந்தவர்களோ அல்லது, பட்டியினத்தைச் சேர்ந்த பீகார் மற்றும் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்களோ, தமிழகத்தில் இருப்பவர்களை போல் மருத்துவராகவோ பொறியாளராகவோ, சாப்ட்வேர் இன்ஜினியராகவோ முடியாத சூழல் இல்லாத காரணத்தினாலும், அந்த ஊரில் சுயமரியாதை இல்லாத காரணத்தினால் தான், அந்த மாநிலத்தில் உள்ள தினக்கூலிகள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்.
இங்குள்ள தமிழக மக்கள் அவர்களை சுயமரியாத்துடன் நடத்துகிறார்கள் அதற்கு நம்முடைய பண்புதான் காரணம். கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலுக்கு வரக்கூடிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, அங்கு, தமிழ் கற்றுக்கொடுத்து அழைத்து வரவேண்டும் என்று திமுக எம்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






