யுபிஐ ஐடியில் இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க.. என்பிசிஐ அறிவிப்பு
சிறப்பு எழுத்துக்கள் கொண்ட யுபிஐ ஐடிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள் மத்திய அமைப்பால் தானாக நிராகரிப்படும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ மூலம் இந்தியாவில் மக்கள் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பண பரிவர்த்தனை மிகவும் சுலபமாக இருப்பதால் மக்கள் இந்த முறையை கடைப்பிடித்து வருகின்றனர். யுபிஐ பண பரிவர்த்தனைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனை ஐடிகளில் புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதாவது, யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து எண் எழுத்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த முறைகளை பின்பற்றவில்லை என்றால் சிறப்பு எழுத்துக்கள் உள்ள யுபிஐ ஐடிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளை மத்திய அமைப்பு தாமாகவே நிராகரித்து விடும் என்று அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: மகா கும்பமேளா 2025: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி.. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இந்த நடைமுறையானது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், யுபிஐ தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
சிறப்பு எழுத்துக்கள்
சிறப்பு எழுத்துக்கள் என்பது ஆங்கில எழுத்துகளான 26 எழுத்துகளை தவிர்த்து உள்ள எழுத்துகளாகும். உதாரணமாக @,! போன்ற எழுத்துக்கள் சிறப்பு எழுத்துக்கள் என்று கூறப்படுகிறது. இந்த எழுத்துக்களை கொண்ட யுபிஐ ஐடிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் நிராகரிப்பட உள்ளது.
இந்தியாவில் யுபிஐயின் பங்கு
இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு 34 சதவீதமாக இருந்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பங்கு கடந்த 2024-ஆம் ஆண்டு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐயின் ஓட்டு மொத்த சராசரி வளர்ச்சி விகிதம் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு 375 கோடியாக இருந்த யுபிஐ பணப் பரிவர்த்தனை கடந்த 2024-ஆம் ஆண்டு 17 ஆயிரத்து 221 கோடியாக அதிகரித்ததுள்ளது.
What's Your Reaction?