தைப்பூசம், தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Feb 6, 2025 - 07:22
 0
தைப்பூசம், தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை
கோப்பு படம்

தைப்பூசம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், நாளை (பிப். 7) மற்றும் வரும் 8, 9-ஆம் தேதிகளில் வார விடுமுறை நாட்கள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 380 பேருந்துகளும் வரும் 8-ஆம் தேதி 530 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடக்களுக்கு நாளை 60 பேருந்துகளும் வரும் 8-ஆம் தேதி 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து நாளை 20 பேருந்துகளும் வரும் 8-ஆம் தேதி 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் 9-ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை 11 ஆயிரத்தூ 336 பயணிகளும் வரும் 8-ஆம் தேதி 634 பயணிகளும் வரும் 9-ஆம் தேதி எட்டாயிரத்து 864 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow