ஆதவ் அர்ஜுனா-நிர்மல் குமாருக்கு தவெகவில் பொறுப்பு.. வெளியான அதிரடி அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![ஆதவ் அர்ஜுனா-நிர்மல் குமாருக்கு தவெகவில் பொறுப்பு.. வெளியான அதிரடி அறிவிப்பு](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_679cbde9d04eb.jpg)
வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் ரேஸில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியுடன் நடிகர் விஜய் களத்தில் குதித்துள்ளார். இதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் சமூக பிரச்சனைகளுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு கண்டனம் தெரிவித்த விஜயை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். களத்தில் மக்களை சந்திக்காமல் விஜய் இணைய தள அரசியல் செய்வதாக விமர்சித்தனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் தனது கட்சியை உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் மூன்று கட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து இன்று (ஜன 31) விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், சமூக ஊடகப் பேச்சாளர் ராஜ் மோகன் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
1. ஆதவ் அர்ஜுனா- தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. சி.டி.ஆர். நிர்மல் குமார்- தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச்செயலாளர்.
3. ஜெகதீஷ்- தலைமைக் கழக இணைப் பொருளாளர்.
4. ராஜ்மோகந் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்.
5. லயோலா மணி (எ) மணிகண்டன்- கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்.
6. பேராசிரியர் சம்பத்குமார்- கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
7. கேத்ரின் பாண்டியன் - கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
8. வீரவிக்னேஷ்வரன் - செய்தித் தொடர்பாளர்
9. ரமேஷ்- இணைச் செய்தித் தொடர்பாளர்
10. ஜெயபிரகாஷ்- தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
11. குருசரண்- தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
12. ரஞ்சன் குமார்- தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
13. குருமூர்த்தி- சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
14. ராம்குமார்- சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
15. வெங்கடேஷ்- சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
16. நிரேஷ் குமார்- சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
17. அறிவானந்தம்- சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)