இளைஞரணி செயலாளராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!.. செய்த சாதனைகள் என்ன?

திமுக இளைஞரணிச் செயலாளர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்து 6ம் ஆண்டு தொடங்கியுள்ளது.5 ஆண்டு காலத்தில் மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Jul 4, 2024 - 12:38
 0
இளைஞரணி செயலாளராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!.. செய்த சாதனைகள் என்ன?
Udayanidhi Stalin

முதல்வரின் பேரனாக அமைச்சரின் மகனாக இருந்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னவர் உதயநிதி ஸ்டாலின். திரைப்பட தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக நடித்து அரசியலுக்கு வந்தவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒற்றை செங்கலோடு உதயநிதி ஸ்டாலின் செய்த பிரசாரம் பரபரப்பை பற்ற வைத்தது. 39 இடங்களில் வென்றது திமுக அந்த வெற்றிக்கு பரிசாக இளைஞர் அணி செயலாளர் பதவியை அளித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். 

இளைஞர் அணி செயலாளராக 5ஆண்டுகள் முடிந்து 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கழக இளைஞர் அணிச் செயலாளராக இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

உறுப்பினர் சேர்க்கை, கிளை-வார்டுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தது, கைவிடப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைத்தது, கொரோனா கால நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்தது,

இரண்டாவது மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதிதோறும் கலைஞர் நூலகம், தேர்தல் பிரச்சாரங்கள்... மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது.

இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும்,இளைஞர் அணியினரைக் களத்தில் உற்சாகப்படுத்தி ஒருங்கிணைக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினுடைய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
கழகப் பணிகள் அனைத்திலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்!மக்கள் பணி, கழகப் பணியை தொய்வின்றி தொடர்வோம்!என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow