Vijayalakshmi Seeman Issue : இதோட நிப்பாட்டிக்கோ.. 2026ல் பிச்சை எடுக்கப்போற சீமான்.. ஆக்ரோசமாக சாபமிட்ட விஜயலட்சுமி

Actress Vijayalakshmi Release Video on Seeman Issue : திமுகவை, என்னை, கருணாநிதியை தவறாக பேசுவதைத் தவிர வேறு எந்த ஒரு அரசியலுமே சீமானுக்கு தெரியாதா? எனவும் நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுதான் கடைசி இதோட நிப்பாட்டிக்கோ சீமான் இல்லாவிட்டால் 2026,ல்பிச்சை எடுக்கப்போறே என்றும் எச்சரித்துள்ளார் விஜயலட்சுமி.

Aug 5, 2024 - 10:46
Aug 6, 2024 - 10:10
 0
Vijayalakshmi Seeman Issue : இதோட நிப்பாட்டிக்கோ.. 2026ல் பிச்சை எடுக்கப்போற சீமான்.. ஆக்ரோசமாக சாபமிட்ட விஜயலட்சுமி
Actress Vijayalakshmi Release Video on Seeman Issue

Actress Vijayalakshmi Release Video on Seeman Issue : திமுக உடன் என்னை கோர்த்து விட்டு பேசும் சீமான் இதோடு நிப்பாட்டிக்கொள்ள வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.திருமணத்திற்கு முன்பு வரை பிச்சைதான் எடுத்துக்கொண்டிருந்தாய். மீண்டும் 2026ஆட்ம ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு சீமான்(Seeman) பிச்சைதான் எடுப்பார் என்றும் சாபம் கொடுத்துள்ளார் விஜயலட்சுமி. 

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும்(Seeman Vijayalakshmi Issue) இடையேயான பஞ்சாயத்து பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. சீமான் தம்மை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கடந்த ஆண்டு கூட சென்னையில் முகாமிட்டு சீமானுக்கு எதிராக பரபரப்பைக் கிளப்பி இருந்தார் விஜயலட்சுமி. பின்னர் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி அவர் பெங்களூர் சென்றார். ஆனாலும் சீமானை தொடர்ந்து விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற  போராட்டத்தில் பேசிய சீமான்(Seeman Speech), திமுகவையும் போலீசாரையும் கடுமையாக விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தக் கூடிய பாடலை 2 முறை பாடினார் சீமான். மேலும், அந்த "பெங்களூர்காரியை வைத்துக் கொண்டு 15 வருஷமா என்னென்னமோ செய்து பார்த்தது திமுக" என நடிகை விஜயலட்சுமி குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார். இது விஜயலட்சுமியை கொந்தளிக்க வைத்துள்ளது. 


இதனையடுத்து விஜயலட்சுமி(Vijayalakshmi Video) இன்றைய தினம் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஏய் சீமான்.. திமுகவையும் கருணாநிதியையும் இழிவுபடுத்தி பேசுவதைத் தவிர வேறு அரசியலே தெரியாதா? இதுதான் உனக்கு கடைசி இத்தோட நிப்பாட்டிக்கோ என்று கூறிய விஜயலட்சுமி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சீமானை வசைபாடியுள்ளார்.

நான் ஏதாவது பேசினால் மாமாவை அப்படி எல்லாம் பேசாதே என்று உன்னோட ஆட்களை விட்டு சொல்றியோ.. போன வருஷம் கூட 50000 கொடுத்தியே.. உனக்கு தெரியாதா? 45 வருஷம் வரைக்கும் கல்யாணம் ஆகமா நான்தான் உன்னைய காப்பாற்றினேன். 2026 தேர்தலில் நீ பிச்சைதான் எடுப்ப.. என்னைய பேசுற நீ நல்லாவே இருக்க மாட்டே என்று சாபமிட்ட விஜயலட்சுமி(Vijayalakshmi), இதோட நிப்பாட்டிக்கோ என்று எச்சரித்துள்ளார். 

சிவனே என்று பெங்களூருவில் இருந்த விஜயலட்சுமியை சீண்டி விட்டு இப்போது ஆக்ரோசமாக பேச வைத்து வார்த்தைக்கு வார்த்தை சாபமிட வைத்துள்ளார் சீமான். இன்னும் எத்தனை வீடியோக்களை வெளியிடப்போகிறாரோ விஜயலட்சுமி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow