"தவெகவுக்கு வாய்க் கொழுப்பு.." பெரியாருக்கு வராதது பி.கே.க்கு வருதா? சரமாரியாக விளாசிய சாட்டை..!

தவெகவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிக்க, அதற்கு தவெக பதிலடி கொடுக்க, அதற்கும் நாதக ரியாக்ட் செய்ய என சோஷியல் மீடியாவையே அரசியல் களமாக மாற்றி மோதிக் கொண்டு வருகின்றனர் நாதக மற்றும் தவெகவினர்... என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்.

Feb 13, 2025 - 21:51
Feb 14, 2025 - 19:21
 0
"தவெகவுக்கு வாய்க் கொழுப்பு.." பெரியாருக்கு வராதது பி.கே.க்கு வருதா? சரமாரியாக விளாசிய சாட்டை..!
"தவெகவுக்கு வாய்க் கொழுப்பு.." பெரியாருக்கு வராதது பி.கே.க்கு வருதா? சரமாரியாக விளாசிய சாட்டை..!

கட்சித் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகம், இதுவரை எந்தவித விமர்சனங்களுக்கும் ரியாக்ட் செய்யாமல், கட்சிப் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வந்தது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் நிர்வாகிகள், கட்சி அணிகள் என அடுத்தடுத்து கட்சி கட்டமைப்பில் தீவிரம் காட்டுகிறது தவெக. ஆனால், தவெக குறித்து பிற கட்சிகள் விமர்சனம் செய்யாமல் இல்லை. சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்துவிடலாம் என கனவு காண்கிறார் விஜய் என்றும், தவெகவால் எதையும் மாற்ற முடியாது என்றும், பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரதான பங்கை ஆற்றி வருகிறடு யார் என்றால், விஜய்யை தம்பி... தம்பி என்று அழைத்து, லாரி மோதி செத்துடுவ என்று வன்மத்தைக் கொட்டிவரும் சீமான் தான். 

விஜய் குறித்து ஏறும் ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான்,   அண்மையில் நடந்த விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது, பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும்? அவருக்கு இங்குள்ள பிரச்சனைகள் குறித்து தெரியுமா? பணக்கொழுப்பு இருப்பவர்களுக்குத்தான் இதுபோன்ற வியூகங்கள் எல்லாம் தேவைப்படும். அதைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்னிடம் காசு இல்லை... மூளை இருக்கிறது என தனது ஸ்டைலில் பஞ்ச் அடித்துவிட்டுச் சென்றார். 

இந்த நிலையில், சீமானின் இந்த பேச்சுக்கு, தவெக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக கொள்கைப் பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, “உழைத்து சம்பாதிப்பதற்கும், திரள் நிதி மூலம் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. திரள் நிதியால் கொழுப்பை வளர்த்து கொண்டிருப்பவர்கள் எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை” எனக் கூறியுள்ளார். 

அதேபோல், தவெகவின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர். சம்பத்குமார், செய்தித் தொலைக்காட்சிகளின் மைக்கை பார்த்துவிட்டால், அண்ணன் சீமானுக்கு உளறுவதே வழக்கமாகிவிட்டது என்றும், சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை எனவும், திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது சீமானுக்கு தவறாக தான் தெரியும்... சட்ட மன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்வது தவெக வழக்கம், ஆனால், சீமானோ பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் கடுமையாகி சாடினார். 

மேலும், பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய சீமான், இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறார் என்று தவெகவின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர். சம்பத்குமார் தெரிவித்துள்ளார். 

முதல்முறையாக தங்கள் மீதான விமர்சனத்துக் தவெக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், தவெக விமர்சனத்திற்கு நாதகவின் சாட்டை துரைமுருகன் ரியாக்ட் செய்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாதகவின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், ”கொள்கைத் தலைவராக தவெக ஏற்றுக்கொண்ட பெரியார் மீது கடும் விமர்சனங்களை வைத்த போது வராத கோபம், பிரசாந்த் கிசோருக்கு செலவு செய்ய பணக்கொழுப்பு எனச் சொன்னதும் வருகிறது என்றால் தவெகவிற்கு கொள்கைத் தலைவர் பெரியாரா? பிரசாந்த் கிசோரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்ந்து, “திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல; வாய்க்கொழுப்பும்கூட! 

மக்கள் மன்றத்திலேயே பேசத் துணிவற்ற சகோதரர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குப் போய் என்னப் பேசப் போகிறார்? முதலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசட்டும். அதற்குத் துணிவு இருக்கிறதா? உளறிக் கொட்டுவதைப் பற்றி யார் பேசுவது? “சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடினார் அம்பேத்கர்” என மாநாட்டு மேடையில் உளறிக் கொட்டிய சகோதரர் விஜய்யின் தொண்டர்களா? எழுதிக் கொடுத்ததைக்கூட பிழையின்றி பேசாதவர், சட்டமன்றத்திற்குப் போய் பேசி, அரசியல் மாற்றத்தை சாத்தியப்படுத்தப் போகிறாரா? வெட்கக்கேடு!” என்று சாட்டை துரைமுருகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்ததில் இருந்தே சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால் கட்சியின் முதல் மாநாட்டில் சீமானின் கொள்கைகளையும் விஜய் வறுத்தெடுத்ததால், ஏகத்துக்கும் டென்ஷனான சீமான் அன்றிலிருந்து விஜயை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.... நாம் தமிழர் கட்சியினரும் த.வெ.க. கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் நா.த.க.-வின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் த.வெ.க. தரப்பு கடந்து சென்ற நிலையில், தற்போது பதிலடி கொடுத்து அரசியல் களத்தில் ஆக்டிவாக மாறியுள்ளது தவெக.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow