தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மக்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் இதனை பெரிய வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
வரலற்றில் சிறப்புமிக்க நாள் இன்று.. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சர் மிகப்பெரிய பிரகடனம் செய்துள்ளார். ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அரிய முடிவுகள் கிடைத்துள்ளது. தமிழர்கள் நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தகாரர்கள். கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றியமொழி. கீழடி ஆராய்ச்சி மூலம் நமக்கு கிடைத்த தகவல் இரும்பு குறித்தது. இரும்பு என்பதை தாதுவிலிருந்து பிரித்து எடுத்து பயன்படுத்துகிற ஆற்றல் தமிழர்களுக்கு தான் இருந்துள்ளது..
5500 ஆண்டுகளுக்கு முன்னால் இரும்புவினை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழர்களிடம் இருந்ததை ஆதாரங்கள் மூலமாக தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தியது திமுகவினர் அல்ல மிகப்பெரிய அறிஞர்கள்.. தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கவேண்டிய நாள் இது. தமிழனத்தின் ஆரம்பகாலம் என்பது 5500ஆண்டுகளுக்கு முன்னால் என்று இருப்பது மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்துள்ளார். தமிழர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இதனை பாராட்டுவார்கள். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பகிர்ந்த போது மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
கருணானிதி காலத்தில் செம்மொழி அந்தஸ்தது கிடைத்தது. இன்று தமிழ்நாடு முதல்வர் காலத்தில் இப்படி ஒரு அறிவிப்பு கிடைத்துள்ளது. தமிழர்கள் எழுதி வைத்தவை கட்டுக்கதைகள் அல்ல.
தமிழர்களின் வாழ்வில் இன்ப நாள் இது. தமிழக அரசின் அழுத்தம் காரணமாக டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் அரசு சார்பில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, தமிழர்கள் வரலாற்றில் மிகமுக்கிய நாள். இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?