சுட்டெரிக்கும் வெயில்.. இடி மின்னலோடு ஜில் மழைக்கும் வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai Weather Report Today : தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Jul 22, 2024 - 15:10
Jul 22, 2024 - 15:29
 0
சுட்டெரிக்கும் வெயில்.. இடி மின்னலோடு ஜில் மழைக்கும் வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்
Chennai Weather Report Today

Chennai Weather Report Today : தமிழ்நாட்டில் இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம்(Chenni Meteorological Centre) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் AWS 4 செமீ மழை பதிவாகியுள்ளது. கூடலூர் பஜார் (நீலகிரி) , மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3, நடுவட்டம் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), கன்னியாகுமரி (Kanyakumari) தலா 2, திருவண்ணாமலை 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  தஞ்சாவூரில்  39.0 ° செல்சியஸ் பதிவாகியுள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோடு நகரில்  20.4 ° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (22.07.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 24.07.2024 முதல் 28.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 
 
தமிழக கடலோரப்பகுதிகளில் 22.07.2024 முதல் 26.07.2024 வரை மன்னார்   வளைகுடா மற்றும்  அதனை  ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்தியமேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் , வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, மத்திய, வடக்கு வங்கக்கடல், வடக்கு  அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.07.2024:மத்திய, வடக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு,  வடக்கு  அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.07.2024:மத்திய, வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், வடக்கு  அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.25.07.2024 மற்றும் 26.07.2024: மத்திய, வடக்கு வங்கக்கடலின் தெற்குப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்,  வடக்கு  அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்றைய தினம் (22.07.2024) மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், கர்நாடக- வடக்கு கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.07.2024 முதல் 26.07.2024 வரை: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow