தங்கம் விலை திடீர் உயர்வு.. ஆடிப்பெருக்கு நாளில் விலை குறையுமா? - நகை வாங்குவோர் எதிர்பார்ப்பு

Gold Prices Hike Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.51,720க்கும், ஒரு கிராம் ரூ.6,465க்கும் விற்பனையாகிறது.

Jul 27, 2024 - 10:45
Jul 27, 2024 - 12:09
 0
தங்கம் விலை திடீர் உயர்வு.. ஆடிப்பெருக்கு நாளில் விலை குறையுமா? - நகை வாங்குவோர் எதிர்பார்ப்பு
Gold Prices Hike Today in Chennai

Gold Prices Hike Today in Chennai : ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்றைய தினம் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.6,465 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.51,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் அன்றைய தினமே தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 51,720 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,465 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 89 என மாற்றமில்லாமல் உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு சவரன் 55,000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. 

பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட பின்னர் தங்கத்தின் விலை சரிவடையத் தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3,160 குறைந்து. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதினர். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ 400 உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் தங்க நகைகளை அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். ஆணோ, பெண்ணோ தங்க நகைகளை அதிக அளவில் அணிகின்றனர். திருமணம் முடிந்து செல்லும் பெண்ணிற்கு தங்கத்தை சீதனமாக பெற்றோர் அளிக்கின்றனர். இது திருமண காலம் என்பதால் தங்க நகைகள் அதிக அளவில் வாங்குகின்றனர். 

ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் தங்கம் வாங்கலாம் என்று பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow