கொலையில் முடிந்த தகராறு.. மனைவி தலையில் ஒரே போடு! உடலை காரில் வைத்து சுற்றுலா
தென்காசியில் பெண்ணை கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசியை திணற வைத்துள்ள கொலை சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

தென்காசி மாவட்டம் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் இலத்தூர் பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி, ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குளதின் அருகே முழுவதும் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் இலத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து விசாரணையை தொடங்கிய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரடியாக வந்து விசாரணை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல் 30வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. மேலும் உடலுக்கு அருகில் மது பாட்டில்கள்யும் சில தடயங்களையும் சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிவகாசியை சேர்ந்த இந்த பெண்ணுடன் தகராறு ஏற்பட்டதால் அவரது கணவர் ஜான் கில்பர்ட் கம்பியால் அடித்து கொன்றுள்ளார். மனைவி இறந்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த கில்பர்ட், இரண்டு நாட்களாக மனைவியின் உடலை தனது நண்பரின் காரில் வைத்து குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார்.
கடைசியில் இலத்தூர் குளத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்டு, அங்கு வைத்து, மனைவியின் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த ஜான் கில்பர்ட்டின் சகோதரரும் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கில்பர்ட்டை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது தனக்கு தெரிய வந்து தகராறு முற்றியதால் தான் மனைவியை கொன்றதாக கூறப்படுகிறது.
மனைவியை அடித்துக் கொன்று அவரது சடலத்துடன் கணவன் இரண்டு நாட்கள் காரில் சுற்றி வந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






