தமிழ்நாட்டுக்கு அடித்த விசிட்.. சனாதன யாத்திரை தொடக்கமா? பவன் கல்யாண் தயங்குவது ஏன்?
தமிழ்நாட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கும்பகோணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பவனின் பக்தி விசிட், சனாதன தர்ம யாத்திரையின் தொடக்கமா என பலர் எண்ணிய நிலையில், பவன் கல்யாண் கூறிய பதில் அனைவரையும் குழப்பியுள்ளது. அப்படி அவர் கூறியது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பவர்புல்லாக இருப்பது போல தான், ஆந்திராவில் பவர்ஃபுல் துணை முதலமைச்சராக இருப்பவர் பவன் கல்யாண்.... திரைத்துறையில் இருந்து அரசியல் எண்ட்ரி கொடுத்து தற்போது துணை முதலமைச்சர்களாக உள்ள இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு கருத்து மோதல் வெடித்தது.
2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியபோது, சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும். எதிர்க்க முடியாது. அதே போல தான் சனாதனமும் என் பேசியிருந்தார்.
சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து எண்ட்ரீ கொடுத்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உதயநிதி பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்தார்.... ”சனாதன தர்மத்தை வைரஸ், அதனை அழித்துவிடுவோம் என்று சொல்லாதீர்கள். யாரெல்லாம் அப்படி சொல்கிறார்களோ கேட்டுக்கொள்ளுங்கள், சனாதன தர்மத்தை இங்கு இருந்து துடைத்தெறிய முடியாது. அதற்கு யாராவது முயற்சித்தால் அவர்கள்தான் துடைத்தெறியப்படுவார்கள்" என உதயநிதி மீது பாய்ந்திருந்தார் பவன் கல்யாண்....
பவன் பேச்சுக்கு ரிப்ளை கொடுக்கும் விதமாக, ”Lets wait and see" என தக்காக சொல்லியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இதனையடுத்து இந்த பிரச்சனையின் வீரியம் கடந்த சில மாதங்களாக அடங்கியிருந்தது. இந்நிலையில் முற்றுப்புள்ளி வைத்த கதையை COMMA போட்டு தொடங்குவதை போல கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் சனாதன தர்ம யாத்திரையை தொடங்குவதாக பவன் கல்யாண் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, பிப்ரவரி 12 ஆம் தேதி கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்றார் பவன் கல்யாண். இதனால், கேரளாவில் தனது சனாதன தர்ம பயணத்தை அவர் தொடங்கினார் என பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பவன். அப்போது அவரை சூழ்ந்துக்கொண்ட செய்தியாளர்கள், சனாதன யாத்திரையின் தொடக்கமா இது? என எழுப்பிய கேள்விக்கு, ’அப்படி எதுவும் இருந்தா சொல்லிட்டு தான் பண்ணுவேன்’ என கூறியுள்ளார்.
இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் விசிட் அடித்த பவன் கல்யாண் அங்கு பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசித்துள்ளார். சானாதான தர்ம யாத்திரையை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்த பவன் கல்யாண் தற்போது தமிழ்நாட்டின் ஆலயங்களுக்கு விசிட் அடித்தும் யாத்திரை விவகாரத்தில் மட்டும் பின்வாங்குவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?






