National Film Awards 2022 : தேசிய திரைப்பட விருது: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன் '.. சிறந்த நடிகர்-நடிகை யார்?

Ponniyin Selvan Won Awards in 70th National Film Awards 2022 : சிறந்த நடிகையாக 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடன இயக்குனராக 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக ஜானி மாஸ்டர், சதீஷ் தேர்வாகியுள்ளனர். கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக 'கேஜிஎப் சாப்டர்1' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Aug 16, 2024 - 14:31
Aug 16, 2024 - 15:47
 0
National Film Awards 2022 : தேசிய திரைப்பட விருது: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன் '.. சிறந்த நடிகர்-நடிகை யார்?
Ponniyin Selvan Won Awards in 70th National Film Awards 2022

Ponniyin Selvan Won Awards in 70th National Film Awards 2022 : இந்தியாவின் 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளது. தமிழிலில் சிறந்த திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருது 'பொன்னியின் செல்வன் 1'(Ponniyin Selvan 1) திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஏ.ஆர்.ரகுமான் பெறும் 7வது தேசிய விருது(National Awards) ஆகும். சிறந்த ஒலி வடிவமைப்பு விருது 'பொன்னியின் செல்வன் 1' படத்துக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது  'பொன்னியின் செல்வன் 1'(Ponniyin Selvan) படத்துக்காக  ரவிவர்மனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தி நடிகை மானசி பரேக்யும் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிறந்த நடன இயக்குனராக 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக ஜானி மாஸ்டர், சதீஷ் தேர்வாகியுள்ளனர். தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்படங்கள் மட்டும் 6 விருதுகளை வென்றுள்ளன. இதில் 'பொன்னியின் செல்வன்' 4 விருதுகளை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் சிறந்த திரைப்படமாக கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஆட்டம்' தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக 'காந்தாரா' படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக 'கேஜிஎப் சாப்டர்1' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கன்னடத்தில் வெளியான 'காந்தாரா' தேர்வு செய்யப்பட்டுள்ளது.  சிறந்த துணை நடிகையாக இந்தி சினிமாவின் நீனா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவன் ராஜ் மல்ஹோத்ரா சிறந்த துணை நடிகர் விருதை வென்றுள்ளார். 

மலையாளத்தில் சிறந்த படமாக 'சவுதி வெலக்கா' தேர்வு செய்யப்படுள்ளது. இதேபோல் சிறந்த தெலுங்கு படமாக 'கார்த்திகேயா 2'ம், சிறந்த பஞ்சாபி படமாக 'பாகி டி டீ'யும், சிறந்த ஒடியா படமாக 'தமன்' திரைப்படமும், சிறந்த மராத்தி படமாக 'வால்வி'யும், சிறந்த இந்தி திரைப்படமாக குல்மோஹரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

இயக்குனர் பிரமோத் குமார் ஹரியான்வி திரைப்படமான Foujaக்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை வென்றார். குஜராத்தி திரைப்படமான 'கட்ச் எக்ஸ்பிரஸ்' தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்பட விருதை வென்றுள்ளது. அயன் முகர்ஜியின் 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக் பிரிவுகளில் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை மலையாளத்தில் வெளியான 'மாளிகைப்புரம்' படத்தில் நடித்த ஸ்ரீபத் வென்றுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருது 'சவுதி வெள்ளக்கா' படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை  'கட்ச் எக்ஸ்பிரஸ்' படத்துக்காக நிகி ஜோஷி வென்றுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை Fouja திரைப்பட பாடல்களை எழுதிய நௌஷாத் சதர் கான் வென்றுள்ளார். சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி விருது 'கேஜிஎப் சாப்டர்2' திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி இயக்கத்திற்கான விருதுகள் (ஸ்டண்ட் கோரியோகிராஃபி) KGF Chpater 2 வென்றது. சிறந்த திரைக்கதைக்கான விருதை 'ஆட்டம்' மலையாள திரைப்படத்திற்காக ஆனந்த் ஏகர்ஷி வென்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow