முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த நடிகர் ரவி மோகன்
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் ரவி மோகன் இலங்கை படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்து பேசியுள்ளார்.
பராசக்தி படப்பிடிப்பு
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். அங்கு தலைநகர் கொழும்புவில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Read more: மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி போராட்டம்...50 விவசாயிகளை கைது செய்த போலீஸ்
பராசக்தி படப்பிடிப்புக்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் இலங்கை சென்றுள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
ஜெயசூர்யா-ரவி மோகன் சந்திப்பு
இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யாவை நடிகர் ரவி மோகன் சந்தித்து பேசியுள்ளார்.
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
Read more: TATA IPL 2025: முதல் வெற்றியை பதிவு செய்த RCB.. 7 விக்கெட் வித்தியாசத்தில் KKR- ஐ வீழ்த்தியது!
பராசக்தி திரைப்படம் 2026 பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






